அமைதி செழுமைக்காக இணைந்து இருக்கவேண்டும்: இந்தியாவிற்கு விரைவில் போரிஸ் பயணம்


பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்தவாரத்தில் இந்தியாவுடனான நீண்டகால உறவுகளை வலுப்படுத்துவதற்காக அந்தநாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள போவதாக தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் பிரித்தானியா இடையிலான நீண்டகால உறவை வலுப்படுத்துவதற்காக இந்த வாரத்தில் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

எதேச்சதிகார அரசிடம் இருந்து நமது அமைதி மற்றும் செழுமைகளுக்காக எதிர்த்து நிற்கும் போது, ஜனநாயக நாடுகளுடனும் நட்பு நாடுகளுடனும் இணைந்து இருப்பது முக்கியம் வாய்ந்தது என தெரிவித்துள்ளார்.

அந்தவகையில் இந்தியா உலகளவில் முக்கியான பொருளாதார மற்றும் மிகப்பெரிய ஜனநாயக நாடு, மேலும் இந்த நிச்சயமற்ற சூழ்நிலையில், இந்தியா பிரித்தானியாவின் மிக மதிப்புமிக்க ராஜதந்திர கூட்டாளி எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தசுற்றுப்பயணம் ஆனது, இருநாட்டு மக்களின் நலனை மையமாக வைத்து இருக்கும் எனவும், அவற்றில் வேலைவாய்ப்பு, பொருளாதார வளர்ச்சி, எரிசக்தி தற்காப்பு மற்றும் பாதுகாப்பு போன்றவற்றை குறித்ததாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.     

16 வயது மகனை கடத்திவிட்டனர்…தயவுசெய்து உதவுங்கள்: உக்ரைன் மாநில தலைவர் கதறல்!



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.