சப்பாத்தி தவிர்க்க முடியாத உணவுகளில் ஒன்றாக உள்ளது. அதற்கு காரணம், அதில் நிறைந்திருக்கும் ஊட்டச்சத்துக்கள் தான். இதில் கால்சியம், பொட்டாசியம், இரும்பு மற்றும் பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் நிரம்பி காணப்படுகின்றன.
உடல் எடையை குறைக்கவும், நீரிழிவு நோயை கட்டுப்படுத்தவும் உதவும், இந்த அற்புத சப்பாத்தி உணவை சாஃப்ட்டாக தயார் செய்து கடினமான வேலையாகும். அதற்கு, இந்த ஸ்டேப்ஸ் ஃபாலோ செய்தால், ஈஸியாக செய்துவிடலாம்.
தேவையானவை
- கோதுமை மாவு
- உப்பு – தேவையான அளவு
- தண்ணீர் – தேவையான அளவு
செய்முறை
ஒரு பாத்திரத்தில் ஒரு கப் கோதுமை மாவு எடுத்துக்கொள்ள வேண்டும். அதற்கு, தேவையான அளவிற்கு உப்பு போட்டுவிட்டு, நன்கு மிக்ஸ் செய்ய வேண்டும். பின்னர் அரை கப் தண்ணீர் சேர்த்து, நன்கு பிசைய வேண்டும் (குறிப்பு: மாவு எடுக்க பயன்படுத்திய கப்பை பயன்படுத்த வேண்டும்)
மேலும், மாவை சாப்ட் ஆக்கிட, அதன் மீது மத்து போன்ற எதேனும் பொருளை வைத்து சுமார் 1 நிமிஷத்துக்கு நன்கு தட்ட வேண்டும். அது இன்னும் சாஃப்ட் ஆக்கிடும். தொடர்ந்து, சப்பாத்தி சூடுவதற்கு எதுவாக மாவை உருட்டிக்கொள்ள வேண்டும்.
பிறகு, தோசை அல்லது தவா கல்லில் மிதமான சூட்டில் அதனை போட்டு விட வேண்டும். சுமார் அரை நிமிஷம் கழித்து, அதனை மாற்றிப்போட்டு, சில நிமிடம் சூட வேண்டும்.
பின்னர், அந்த சப்பாத்தியை பக்கத்து பர்னரை ஆன் மட்டும் செய்துவிட்டு, நெருப்பு மீது வைத்து 3 அல்லது 4 முறை புரட்டிப்போட வேண்டும்.
அவ்வளவு தான், இன்ஸ்டன்ட் சாஃப்ட் சப்பாத்தி ரெடியாகிவிட்டது. அவற்றை உங்களுக்கு பிடித்த சைடிஷ்களுடன் சேர்த்து ருசித்து மகிழவும்.