ஹரியானாவில் கெயில் எரிவாயுக்குழாய் பதிக்கப்பட்டுள்ள பகுதி அருகே ரசாயன தொழிற்சாலையில் பெரும் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.
ஹரியானா மாநிலம் சோனிபட் என்ற இடத்திலுள்ள அந்த தொழிற்சாலையில் பற்பசை தயாரிப்புக்கான மூலப்பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்நிலையில் ஆலையின் ஒரு பகுதியில் பற்றிய தீ, மளமளவென மற்ற பகுதிகளுக்கும் வேகமாக பரவியது. பணியாளர்கள் உடனடியாக வெளியேறியதால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.
தீ விபத்து நேரிட்ட தொழிற்சாலையின் அருகே கெயில் எரிவாயுக்குழாய் செல்வதால் அப்பகுதி மக்களிடையே அச்சம் தொற்றிக்கொண்டது. 50க்கும் மேற்பட்ட வாகனங்களில் சென்ற தீயணைப்பு வீரர்கள் கடுமையாக முயற்சித்து தீயை அணைத்து பெரும் அசம்பாவிதம் ஏற்படாமல் தடுத்தனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM