இன்று மாமல்லபுரம் சென்றால் சிறப்பு சலுகை.. என்ன தெரியுமா?

சென்னையில் சுமார் 50 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள பிரபல சுற்றுலா இடம் மாமல்லபுரம்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் இந்தச் சுற்றுலா நகரம் அமைந்துள்ளது.

உள்நாட்டவரை மட்டுமல்லாமல் வெளிநாட்டவரையும் அதிகம் கவர்ந்திழுக்கும் இடம் மாமல்லபுரம்.
உலக பாரம்பரிய தினம் இன்று அனுசரிக்கப்படுவதையொட்டி, மாமல்லபுரத்தில் புராதன சின்னங்களை இலவசமாக கண்டு களிக்கலாம் என தொல்லியல் துறை அறிவித்துள்ளது.

சாலை விபத்தில் தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் பலி

கடற்கரை கோயில், அர்ஜுனன் தபசு, வெண்ணெய் உருண்டை பாறை உள்ளிட்ட புராதன சின்னங்களை இன்று மாலை 6 மணி வரை இலவசமாக கண்டு ரசிக்கலாம் என தொல்லியல் துறை அறிவித்துள்ளது.

சென்னை தியாகராய நகர், தாம்பரம், பிராட்வே, கோயம்பேடு உள்ளிட்ட நகரங்களில் இருந்து மாமல்லபுரத்துக்கு நேரடி பேருந்து வசதி உள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.