உலக சுகாதார அமைப்பின் தலைவர் ஜெனரல் டாக்டர் டெட்ரோஸ் கேப்ரியஸஸ் மூன்று நாள் பயணமாக இன்று குஜராத் மாநிலம் ராஜ்கோட்டுக்கு வருகிறார்.
நாளை ஜாம்நகரில் உலக சுகாதார அமைப்பின் சார்பில் அமைக்கப்படும் பாரம்பரிய வைத்திய மையத்தின் நிகழ்ச்சியில் பிரதமர் மோடியுடன் அவர் பங்கேற்கிறார். உலகில் முதன் முறையாக பாரம்பரிய வைத்தியத்துக்கான சர்வதேச மையம் அமைக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதே போல் மொரிஷியஸ் பிரதமர் பிரவிந்த் குமார் ஜூகு நாத் தும் இன்று ராஜ்கோட் வருகிறார். அவரும் பிரதமரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளார்.