மோடி மற்றும் அம்பேத்கரை ஒப்பிட்டதற்காக இளையராஜாவை அவமானப்படுத்துவதா என்று கூறி பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக இன்று பேசியுள்ள ஜே.பி.நட்டா, “இளையராஜா குறித்த விமர்சனங்களில் ஜனநாயகம் இல்லை. ஒரு அரசியல் கட்சிக்கும் அதன் கூட்டணி கட்சிகளுக்கும் இளையராஜாவின் கருத்துகள் பிடிக்கவில்லை என்பதால் அவர் அவமானப்படுத்தப்படுகிறார். எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களிலெல்லாம் வன்முறைகள் அதிகரித்து வருகின்றது.
தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் பாஜக தொண்டர்கள் குறிவைத்து தாக்கப்படுகின்றனர். ஆட்சியென்பது நாட்டின் இளைஞர்களின் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருக்கவேண்டுமே தவிர; தடைக்கல்லாக இருக்கக்கூடாது. எதிர்க்கட்சிகள் இனியாவது தங்களது பாதையை மாற்றிக்கொள்ளவேண்டும்” எனக் கூறியுள்ளார்.
சமீபத்திய செய்தி: உலக பாரம்பரிய தினம் இன்று: இந்தியாவும் சில முக்கியமான இடங்களும் – ஒரு பார்வைSource : WWW.PUTHIYATHALAIMURAI.COM