பிரதமர் நரேந்திர மோடி வருகிற 24-ந் தேதி ஜம்மு காஷ்மீர் செல்லும் நிலையில், பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.
தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் வருகிற 24-ந்தேதி கொண்டாடப்படும் நிலையில், அதையொட்டி காஷ்மீரின் சம்பா மாவட்டத்துக்கு உட்பட்ட பாலி கிராமத்தில் சிறப்பு விழா நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக செல்லும் பிரதமர் மோடி 30 ஆயிரத்துக்கு மேற்பட்ட பஞ்சாயத்து ராஜ் உறுப்பினர்கள் கலந்து கொள்ளும் பிரமாண்ட கூட்டத்தில் சிறப்புரையாற்றுகிறார்.
இதற்கிடையே, பிரதமர் மோடியின் பயணத்தை முன்னிட்டு காஷ்மீரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. காஷ்மீரின் எல்லைப்பகுதிகள், தேசிய நெடுஞ்சாலைகள், நகர்ப்புற கட்டமைப்புகள் அனைத்திலும் பாதுகாப்பை பலப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் ரோந்துப்பணி, மாநிலங்களுக்கு இடையேயான சோதனைச்சாவடிகளில் வாகன சோதனை போன்றவற்றை தீவிரப்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.