மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஈஸ்டர் தினத்தில் இலங்கையில் நடைபெற்ற குண்டு வெடிப்புகளைக் கண்டித்து நேற்று ஈஸ்டர் தினத்தில் இலங்கை வாழ் கிறித்துவர்கள் சவங்களைப் போல் படுத்து நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தேவாலயத்தில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் உயிரிழந்த 260 பேரின் மரணத்துக்கு நீதி வழங்கும்படி அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த இந்த துயர சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிச்சயமாக நீதி வழங்கப்படும் என்றும் இதற்கு தேவையான அனைத்து சட்ட நடவடிக்கைகளும் எடுத்து வருவதாகவும் அதிபர் கோத்தபயா ராஜபக்சே அறிவித்துள்ளார்