இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் போராட்டம் நடைபெற்று வருகிறது. அந்நாட்டு அதிபர் கோத்தபய ராஜபக்ஷே, பிரதமர் மகிந்த ராஜபக்ஷே ஆகியோர் பதவி விலகக்கோரி மக்கள் போராடி வருகின்றனர். இதை தொடர்ந்து அந்நாட்டு மந்திரி சபையில் உள்ள அனைத்து மந்திரிகளும் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர்.
இந்நிலையில் அதிபர் கோத்தபய இன்று புதிதாக 17 மந்திரிகளை நியமிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது நியமிக்கப்படவுள்ள மந்திரி சபையின் அளவு சிறிதாக இருந்தாலும், அரசு பாதிப்பில்லாமல் இயக்கும். இழந்த பொருளாதாரத்தை மீட்டு எடுக்கும் எனவும் கோத்தபய கூறியுள்ளார்.
இன்று புதிய மந்திரிகள் பொறுப்பேற்றபின் நாளை மந்திரி சபை கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.