சாமானியர்கள் பெரும் கவலை.. எகிறி அடிக்கும் தங்கம் விலை.. இன்று விலை என்ன தெரியுமா?

தங்கம் விலையானது பல்வேறு காரணிகளுக்கும் மத்தியில் இன்றும் பலத்த ஏற்றத்தில் காணப்படுகின்றது. இது தங்க முதலீட்டாளர்களுக்கும், இல்லத்தரசிகளுக்கும் பெரும் கவலையளிக்கும் ஒரு விஷயமாகவே பார்க்கப்படுகிறது.

சாமானியர்கள் தங்கத்தினை இனி நினைத்து மட்டும் தான் பார்க்க முடியும்போல, வாங்குவது இயலாத காரியம் எனலாம். ஏனெனில் அந்தளவுக்கு தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகின்றது.

போகிற போக்கினை பார்த்தால் நிபுணர்கள் கூறியதுபோல 2000 டாலர்களை விரைவில் கடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஏற்றம் இப்படியே தொடருமா? அல்லது மீண்டும் சரியுமா? அடுத்து என்ன செய்யலாம். நிபுணர்களின் கணிப்பு என்ன? வாருங்கள் பார்க்கலாம்.

அஜய் சேத்-க்கு உடல்நல பாதிப்பு.. மத்திய நிதியமைச்சகத்தில் மிகப்பெரிய மாற்றம்..!!

உச்சம் தொடும் பணவீக்கம்

உச்சம் தொடும் பணவீக்கம்

சர்வதேச அளவில் உக்ரைன் – ரஷ்யா பிரச்சனையானது விலைவாசியினை தூண்டியுள்ளது. இது பணவீக்கம் உச்சம் தொடவும் காரணமாக அமைந்துள்ளது. இது பாதுகாப்பு புகலிடமான தங்கம் விலை அதிகரிக்க காரணமாக அமைந்துள்ளது. இது இனியும் தொடர்ந்து ஏற்றம் காண காரணமாக அமையலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

எண்ணெய் விலை அதிகரிப்பு

எண்ணெய் விலை அதிகரிப்பு

தொடர்ந்து அதிகரித்து வரும் உக்ரைன் பதற்றத்தின் மத்தியில் திரவத் தங்கம் என்று கூறப்படும் கச்சா எண்ணெய் விலையும் உச்சம் தொட ஆரம்பித்துள்ளது. இதனால் பணவீக்கம் இன்னும் உச்சம் தொடலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அதிகரிக்கும் கச்சா எண்ணெய் விலையானது சங்கிலித் தொடராக பல பொருட்களின் விலையினை ஊக்குவிக்கலாம். மொத்தத்தில் தங்கம் விலை அதிகரிக்க இது காரணமாக அமையலாம்.

பத்திர சந்தை ஏற்றம்
 

பத்திர சந்தை ஏற்றம்

அமெரிக்க பத்திர சந்தையானது ஏற்றம் கண்டுள்ள நிலையில், அது வட்டியில்லா முதலீடான தங்கத்தில் முதலீடுகள் குறைய காரணமாக அமையலாம்.எனினும் அதிகரித்து வரும் பணவீக்கம், சர்வதேச அரசியல் பதற்றம் என பல காரணிகளும் பாதுகாப்பு புகலிடமான தங்கத்தினை ஊக்கத்தினை அளிக்கலாம்.

முக்கிய லெவல்

முக்கிய லெவல்

தங்கத்தின் விலையானது சர்வதேச சந்தையில் இன்று 1984 டாலர்கள் என்ற நிலையில் காணப்படும் நிலையில், அடுத்த முக்கிய லெவல் 2000 டாலர்கள் என நிபுணர்கள் கருதுகின்றனர்.இதன் சப்போர்ட் லெவல் 1956 – 1940 டாலர்கள் என்றும், இதே ரெசிஸ்டன்ஸ் லெவல் 1984 – 2000 டாலர்களாகவும் நிபுணர்கள் மதிப்பிட்டுள்ளனர். இதே ரூபாயில் சப்போர்ட் லெவலாக 52,670 – 52,410 ரூபாயாகவும், ரெசிஸ்டன்ஸ் லெவல் 53,220 – 53,450 ரூபாயாகவும் விபி கமாடிட்டீஸ் நிபுணர்கள் கணித்துள்ளனர்.

என்ன பேச போகிறார்கள்?

என்ன பேச போகிறார்கள்?

வியாழக்கிழமையன்று நடைபெறவுள்ள ஐஎம்எஃப் கூட்டத்தில் அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கி தலைவர் ஜெரோம் பவல் மற்றும் ஐரோப்பிய மத்திய வங்கியின் தலைவரும் சர்வதேச பொருளாதாரம் பற்றி பேசவுள்ளனர். ஆக இதனை முதலீட்டாளர்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். இது மிகப்பெரிய தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

டெக்னிக்கல் என்ன சொல்கிறது?

டெக்னிக்கல் என்ன சொல்கிறது?

சர்வதேச சந்தையினை பொறுத்தவரையில் தினசரி கேண்டில், வார கேண்டில், என அனைத்தும் தங்கம் விலை சற்று அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது. ஆக நீண்டகால நோக்கில் வாங்க நினைப்பவர்கள் வாங்கலாம். இதே மீடியம் டெர்மில் சற்று குறைந்த பின்னர் வாங்குவது நல்லது. மொத்தத்தில் தங்கத்தினை வாங்கலாம்.

சர்வதேச சந்தையில் தங்கம்

சர்வதேச சந்தையில் தங்கம்

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது தற்போது சற்று அதிகரித்து, 1985.90 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவு விலையும், இன்று தொடக்க விலையும் ஒன்றே. எனினும் கடந்த அமர்வின் அதிகபட்ச விலையை உடைத்துள்ளது. எப்படியிருப்பினும் தங்கம் விலையானது மீடியம் டெர்மில் சற்று குறைந்து பின்னர் அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

சர்வதேச சந்தையில் வெள்ளி

சர்வதேச சந்தையில் வெள்ளி

சர்வதேச சந்தையில் வெள்ளி விலை சற்று அதிகரித்தே காணப்படுகின்றது. தற்போது அவுன்ஸூக்கு 1.39% அதிகரித்து, 26.058 டாலராக காணப்படுகின்றது. இது கடந்த அமர்வின் முடிவு விலையை காட்டிலும், இன்று கீழாகவே தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் அதிகபட்ச விலை உடைத்துக் காட்டியுள்ளது. இது மீடியம் டெர்மில் சற்று குறையலாம் என்றாலும், நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய சந்தையில் தங்கம் விலை

இந்திய சந்தையில் தங்கம் விலை

சர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய சந்தையிலும் தங்கம் விலையானது அதிகரித்தே காணப்படுகிறது. தற்போது 10 கிராமுக்கு 457 ரூபாய் அதிகரித்து, 53,449 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவு விலையை விட, இன்று மேலாகவே கேப் அப் ஆகி தொடங்கியுள்ளது. கடந்த அமர்வின் அதிகபட்ச விலையையும் உடைத்துள்ளது. தங்கம் விலையானது அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய சந்தையில் வெள்ளி விலை

இந்திய சந்தையில் வெள்ளி விலை

இந்திய சந்தையில் வெள்ளி விலையும் அதிகரித்தே காணப்படுகின்றது. தற்போது கிலோவுக்கு 953 ரூபாய் அதிகரித்து, 69,985 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. வெள்ளி விலை கடந்த அமர்வின் முடிவு விலையினை விட, இன்று கேப் அப் ஆகி மேலாகவே தொடங்கியுள்ளது. கடந்த அமர்வின் அதிகபட்ச விலையையும் உடைத்துள்ளது. ஆக வெள்ளி விலையும் அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

ஆபரண தங்கம் விலை

ஆபரண தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது அதிகரித்துள்ள நிலையில், ஆபரண தங்கம் விலையும் இன்று சற்றே அதிகரித்தே காணப்படுகின்றது. குறிப்பாக சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலையானது, கிராமுக்கு 33 ரூபாய் அதிகரித்து, 5047 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 264 ரூபாய் அதிகரித்து, 4,376 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

தூய தங்கம் விலை

தூய தங்கம் விலை

இதே சென்னையில் இன்று தூய தங்கத்தின் விலையும் இன்று அதிகரித்தே காணப்படுகின்றது. இதுவும் கிராமுக்கு 36 ரூபாய் அதிகரித்து, 5506 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 208 ரூபாய் அதிகரித்து, 44,048 ரூபாயாகவும், 10 கிராமுக்கு 55,060 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

வெள்ளி விலை நிலவரம்

வெள்ளி விலை நிலவரம்

ஆபரண வெள்ளி விலையும் இன்று சற்று அதிகரித்தே காணப்படுகின்றது. இது தற்போது கிராமுக்கு 1 ரூபாய் அதிகரித்து, 75.20 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 752 ரூபாயாகவும், இதுவே கிலோவுக்கு 1000 ரூபாய் அதிகரித்து, 75,200 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

இன்று என்ன செய்யலாம்?

இன்று என்ன செய்யலாம்?

தங்கம் மற்றும் வெள்ளி விலையானது நிலவி வரும் அரசியல் பதற்றங்களுக்கு மத்தியிலும், இன்று சற்று ஏற்றத்திலேயே காணப்படுகின்றது. இது மீடியம் டெர்மில் இன்னும் சற்று குறையலாம் என்றாலும், நீண்டகால நோக்கில் சற்று அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது. இதே ஆபரண தங்கத்தினை பொறுத்தவரையில் நீண்டகால நோக்கில் தேவை என்பது அதிகரிக்கவே செய்யும் என்பதால், தேவையிருக்கும் பட்சத்தில் வாங்கி வைக்கலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

gold price on April 18th 2022: gold price today surge to highest in over one month

gold price on April 18th 2022: gold price today surge to highest in over one month/சாமானியர்கள் பெரும் கவலை.. எகிறி அடிக்கும் தங்கம் விலை.. இன்று விலை என்ன தெரியுமா?

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.