200 கி.மீ தூரம் ஓட்டம் – உ.பி. முதல்வர் யோகியை அசத்திய 10 வயது சிறுமி

முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சந்திப்பதற்காக உத்தரப்பிரதேசத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் இருந்து லக்னோவிற்கு 200 கி.மீ தூரம் ஓடி வந்த 10 வயது விளையாட்டு வீராங்கனை காஜல் அவரை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சந்திப்பதற்காக பிரயாக்ராஜில் இருந்து லக்னோவிற்கு ஓடிய 4 ஆம் வகுப்பு சிறுமி, முதல்வரை சந்தித்து வாழ்த்துகளை பெற்றார். முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் இல்லத்தில் நடந்த சந்திப்பின் போது, விளையாட்டு வீராங்கனை காஜலுக்கு ஒரு ஜோடி காலணிகள், டிராக்சூட் மற்றும் விளையாட்டு கிட் ஆகியவற்றை பரிசாக வழங்கி ஊக்கப்படுத்தினார்.
Yogi Adityanath`s 10-year-old athlete fan runs from Prayagraj to Lucknow to  meet him, here`s why - Feedoo

இந்த நிகழ்வின் போது, முதல்வர் யோகி ஆதித்யநாத் அந்த சிறுமியை கெளரவித்ததோடு, தடகளத்தில் அதிக உயரங்களை அடைய வேண்டும் என ஊக்குவித்தார் என்று அரசின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

4 ஆம் வகுப்பு படிக்கும் காஜல் என்ற சிறுமி பிரயாக்ராஜின் மண்டா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசிக்கிறார். இவர் ஏப்ரல் 10 ஆம் தேதி பிரயாக்ராஜில் இருந்து தனது பயணத்தைத் தொடங்கி, 200 கிமீ ஓடி ஏப்ரல் 15 அன்று தனது பயணத்தை முடித்தார்.  இந்த நிலையில், லக்னோவில் உள்ள பாபு பனாரசி தாஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமி காஜலின் திறமையை கவுரவித்து, அவருக்கு வாழ்நாள் முழுவதும் விளையாட்டு கிட் மற்றும் காலணிகளை வழங்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.