பங்களாதேஷிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இலங்கை தேசிய கிரிக்கெட் அணிக்கு பயிற்றுவிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
முன்னாள் டெஸ்ட் கிரிக்கெட் வீரர் நவீட் நவாஸ் இரண்டு வருட காலத்திற்கு உதவிப் பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இதற்கு முன்னர் பங்களாதேஷ் 19 வயதிற்கு உட்பட்ட கிரிக்கெட் அணியின் பிரதம பயிற்றுவிப்பாளராகச் செயற்பட்டார். இலங்கை அணியின் பிரதம பயிற்றுவிப்பாளராக கிறிஸ் சில்வர்வூட் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேபோன்று வேகப்பந்து பயிற்றுவிப்பாளராக சமிந்தவாஸ் செயற்படவுள்ளார். சுழல் பந்து பயிற்றுவிப்பாளராக பியல் விஜேதுங்க நியமிக்கப்பட்டுள்ளார். களத்தடுப்புப் பயிற்றுவிப்பாளராக மனோஜ் அபேவிக்ரம நியமிக்கப்பட்டுள்ளார். அணியின் முகாமையாளராக மஹிந்த ஹலங்கொட நியமிக்கப்பட்டுள்ளார்.
பங்களாதேஷில் இடம்பெறவுள்ள கிரிக்கெட் போட்டியில் இரண்டு டெஸ்ட் போட்டிகளும் உள்ளடங்கியுள்ளன.