1089 கால்நடை மருத்துவர்களுக்கு பணிநியமன ஆணைகள்! முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார்..

சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்ட 1089 கால்நடை மருத்துவர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்குவதன் அடையாளமாக, 5 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

சென்னைத் தலைமைச்செயலகத்தில் இன்று காலை நடைபெற்ற நிகர்ச்சியில்,  கால்நடை உதவி மருத்துவர் பணியிடங்களுக்கான பணி நியமன ஆணைகளை 5 பேருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், முதல்வர் ஸ்டாலின் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வா ணையம் மூலம் தேர்வு செய்யப்பட்ட 1089 கால்நடை மருத்துவப் பட்டதாரிகளுக்கு கால்நடை உதவி மருத்துவர் பணியிடங்களுக்கான பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக, 5 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார். இதையும் படிக்க- நீட் விலக்கு மசோதா 210 நாள்களாக ஆளுநர் மாளிகையில் முடங்கிக் கிடக்கிறது: முதல்வர் ஸ்டாலின் கடந்த பத்தாண்டு காலமாக கால்நடை உதவி மருத்துவர் பணியிடங்கள் நிரப்பப்படாத நிலையில், தமிழ்நாடு அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளின் காரணமாக தற்போது 1089 கால்நடை உதவி மருத்துவர் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. இதன் காரணமாக, கால்நடைகளுக்கு மருத்துவச் சிகிச்சைகள் மேலும் சிறப்பாக வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, கால்டை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் தென்காசி. சு.ஜவஹர், கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவப் பணிகள் ஆணையர் அ.ஞானசேகரன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.