'பாலிவுட் பாக்ஸ் ஆஃபிஸை' அதிரவைத்த ‘கே.ஜி.எஃப். 2’ வசூல் – ஒரு நாள் 'கலெக்சன்' எவ்வளவு?

நடிகர் யாஷ் நடிப்பில் வெளியான ‘கே.ஜி.எஃப். 2’ படம் மாபெரும் சாதனை படைத்து வரும்நிலையில், பாலிவுட்டில் மேலும் ஒரு சாதனை புரிந்துள்ளது.

பிரசாந்த் நீல் இயக்கத்தில், யாஷ் நடிப்பில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான ‘கே.ஜி.எஃப். 1’ திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, ‘கே.ஜி.எஃப். 2’ படத்திற்கு இந்திய முழுவதும் உள்ள சினிமா ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. இதையடுத்து கடந்த ஏப்ரல் 14-ம் தேதி, உலகம் முழுவதும் திரையரங்குகளில் ‘கே.ஜி.எஃப். 2’ படம் வெளியானது.

ரசிகர்கள் எதிர்பார்த்ததுப் போன்றே, படத்தின் விஷுவல், சண்டைக் காட்சிகள், வசனங்கள், இசை என அனைத்தும் ‘கே.ஜி.எஃப். 2’ படத்தில் மிரட்டலாக இருந்தது. இதனால், இந்தியா முழுவதும் பல்வேறு சாதனைகளை புரிந்து வருகிறது இந்தப் படம். முதன்முதலாக தென்னிந்தியாவை சேர்ந்த கன்னட மொழிப் படம் ஒன்று, பல்வேறு மொழிகளை பேசும் சினிமா ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பு பெற்று வசூல்ரீதியாகவும், விமர்சனரீதியாகவும் சாதனை புரிந்து வருகிறது.

image

படம் வெளியான 4 நாட்களில் 500 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் சாதனை புரிந்துள்ளது. இந்நிலையில், விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை நேற்று மட்டும், இந்தியில் 52 கோடி ரூபாய் வரை ‘கே.ஜி.எஃப். 2’ படம் வசூலித்து சாதித்துள்ளது. அல்லு அர்ஜூனின் ‘புஷ்பா’, ராஜமௌலியின் ‘ஆர்.ஆர்.ஆர்.’ திரைப்படங்களுக்குப் பிறகு, வட இந்தியாவில் அதிகளவு ரசிகர்களை ‘கே.ஜி.எஃப். 2’ ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் சஞ்சய் தத், ரவீணா தாண்டன், மாளவிகா அவினாஷ், ஸ்ரீநிதி ஷெட்டி, ஆனந்த் நாக், அர்ச்சனா ஜோயிஸ் ஆகியோர் நடித்திருந்தனர். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.