சென்னை: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் 217 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு உள்ளது மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது. காவல்துறை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. வி.கே.சசிகலா, எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோரை விசாரிக்க கோரி குற்றம்சாட்டப்பட்டவர்களில் ஒருவரான தீபு வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில் வழக்கு விசாரணை 6 வாரங்களுக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.