கொடுங்கள்! மகிழ்ச்சி பெறுவீர்கள் ! ரம்ஜான் சிந்தனைகள்-16| Dinamalar

இந்த மண்ணை விட்டுச் சென்றதும் மறுமை நாளில் இறைவன் முன் மனிதன் நிறுத்தப்படுவான். அப்போது ” மண்ணுலகில் உனக்கு செல்வத்தை அள்ளித் தந்தேனே… ஆனால் நீ எப்படி செயல்பட்டாய்?” எனக் கேள்வி கேட்கப்படும்.

”இறைவா! பணத்தை பன்மடங்காக பெருக்கினேன். அதை அப்படியே உலகிலேயே விட்டு இங்கு வந்தேன். என்னை மீண்டும் பூமிக்கு அனுப்பினால் அனைத்தையும் எடுத்து வருவேன்” என பதிலளிப்பான்.

”மறுமைக்காக அங்கிருந்து என்ன அனுப்பி வைத்தாய்” எனக் கேட்டால் பதிலளிக்க முடியாமல் திணறுவான். மறுமையின் பங்கு ஏதும் இல்லாதவன் இறுதியில் நரகத்திற்கு தள்ளப்படுவான்.பூமியில் சேர்த்து வைக்கும் பணத்தால் பயன் கிடைக்காது. சிறிதளவு தர்மம் செய்தால் கூட மறுஉலகில் மகிழ்ச்சியாக வாழலாம். இறையச்சத்துடன் தர்மம் செய்பவர்கள் துணிச்சலுடன், ‘எனக்கு கிடைத்த செல்வத்தில் இன்ன தர்மங்களைச் செய்தேன்’ என பட்டியல் இடலாம். குறுகிய கால மனித வாழ்வில் தவறான பாதையில் சென்று போலியான சுகங்களைப் பெறுவதை விட, மறுமைக்காக தர்மம் செய்வது நல்லது.

latest tamil news

இன்று நோன்பு திறக்கும் நேரம்: மாலை 6:35 மணி

நாளை நோன்பு வைக்கும் நேரம்: அதிகாலை 4:32 மணி.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.