சுகர் பேஷண்ட்ஸ் உஷார்: உங்க கல்லீரலை பாதுகாக்க இதையெல்லாம் சாப்பிடாதீங்க!

:World Liver Day News,World Liver Day 2022,World liver Day , how to protect liver, tips for healthy liver: தற்போதைய காலகட்டத்தில், உலகில் அதிக மக்கள் சந்திக்கும் முக்கிய பிரச்சினைகளில் ஒன்று நீரிழிவு. வெளிப்படையான பல நோய்களை காட்டியிலும், அதிகமான உடல் செயல்பாடுகளை சேதப்படுத்தும் இந்த நீரிழிவு நோய் இருந்தால், உங்கள் கல்லீரல் பாதுகாப்பில் நீங்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

இதில் கவனம் செலுத்தவில்லை என்றால்,ஆல்கஹால் அல்லாத கொழுப்பு கல்லீரல் நோய் (NAFLD) ஏற்படும் நிலைக்கு வழிவகுக்கும், இது கல்லீரல் ஈரல் அழற்சி அல்லது கல்லீரலின் வடுவை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது. சீரான இடைவெளியில் நிறைய புதிய பழங்கள் மற்றும் காய்கறிகளுடன் நன்கு சமநிலையான உணவை உட்கொள்வது மற்றும் சுறுசுறுப்பாக இருப்பது உங்கள் கல்லீரலைப் பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கும்.

இந்தியாவில் கல்லீரல் செயலிழப்பு மற்றும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கு நீரிழிவு நோய் இரண்டாவது காரணமாக உள்ளது.. டைப் 2 நீரிழிவு என்பது ஒருவரின் உடல் சர்க்கரையை வளர்சிதை மாற்றத்தை பாதிக்கும் ஒரு நாள்பட்ட நிலையாகும். உடலின் இன்சுலின் சுரப்பு நிற்கும்போது இது நிகழ்கிறது. இது கல்லீரல் நோயுடன் தொடர்புடையதா இருக்கலாம். இந்த நோயினால் பாதிக்கப்படும் ஒருவர் தனது அன்றாட நடவடிக்கைகளை எளிதாகச் செய்ய முடியாது.

“நீரிழிவு மற்றும் உடல் பருமன் மற்றும் ஆல்கஹால் அல்லாத கொழுப்பு கல்லீரல் நோய்க்கு (NAFLD) வழிவகுக்கும், இங்கே, கல்லீரல் கொழுப்பு வீக்கத்தைத் தூண்டுகிறது, இது சிரோசிஸ் மற்றும் இறுதி நிலை கல்லீரல் நோயை உண்டாக்கும் வடு திசுக்களை உருவாக்குகிறது. தாமதமாகவதற்கு முன்பு கல்லீரல் நோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சையளிப்பது கடினம். வீக்கம் மற்றும் தழும்புகள் இருந்தாலும்,, பெரும்பாலான நீரிழிவு நோயாளிகள் கல்லீரல் நோயைப் பற்றி அறியாமல் இருப்பதற்கு இதுவே முக்கிய காரணம்.

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கல்லீரல் புற்றுநோய் மற்றும் கல்லீரல் செயலிழப்பு அதிகமாக உள்ளது, இந்த நோயைக் கண்காணிப்பது மிகவும் முக்கியமானது. இதய நோய், பக்கவாதம், வகை 2 நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், இன்சுலின் எதிர்ப்பு, உடல் பருமன், உயர் இரத்த சர்க்கரை, இடுப்பைச் சுற்றியுள்ள அதிகப்படியான உடல் கொழுப்பு மற்றும் அசாதாரண கொழுப்பு அல்லது ட்ரைகிளிசரைடு அளவுகள் உட்பட வளர்சிதை மாற்ற நோய்க்குறி கொண்டிருப்பதற்கான ஆபத்து அதிகமாக உள்ளது.

உங்களுக்கு நீரிழிவு நோய் இருக்கும்போது உங்கள் கல்லீரலை எவ்வாறு பராமரிப்பது?

சத்தான உணவை உட்கொள்வதன் மூலமும், நொறுக்குத் தீனிகள், பதப்படுத்தப்பட்ட சர்க்கரை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்ப்பதன் மூலமும் உங்கள் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தலாம்.

கோலாக்கள், சோடாக்கள், ஜூஸ், இனிப்புகள், பேக்கரி பொருட்கள் மற்றும் மிட்டாய்கள் ஆகியவற்றை நிபுணரால் பரிந்துரைக்கப்பட்ட அளவில் சீரான இடைவெளியில் சாப்பிடுங்கள்.

முழு தானியங்கள், புதிய பழங்கள் மற்றும் காய்கறிகள் உங்கள் தினசரி உணவின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும், ஒவ்வொரு நாளும் சுமார் அரை மணி நேரம் உடற்பயிற்சி செய்யுங்கள்.

நீச்சல், சைக்கிள் ஓட்டுதல், யோகா, ஜிம்மிங், ஏரோபிக்ஸ், ஓட்டம் அல்லது ஜாகிங் போன்ற செயல்பாடுகளை நீங்கள் செய்யலாம்.

உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க சோடியம் மற்றும் காஃபினைக் குறைக்கவும். புகைபிடித்தல் மற்றும் மது அருந்ததுவதை தவிர்க்கவும். கல்லீரல் நோயைப் கண்டுபிடிக்க மருத்துவர் பரிந்துரைத்தபடி நீங்களே பரிசோதனை செய்துகொள்ளுங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.