4 மாத உச்சத்தில் மொத்த விலை பணவீக்கம்.. கச்சா எண்ணெய் விலை உயர்வின் எதிரொலி..!

மார்ச் மாதத்தின் மொத்த விலை பணவீக்கம் நான்கு மாதங்களில் இல்லாத அளவுக்கு உயர்ந்து 14.55 சதவீதமாக உள்ளது. இதன் உயர்வுக்கு மிக முக்கியக் காரணம் கச்சா எண்ணெய் மற்றும் முக்கிய வர்த்தகப் பொருட்களின் விலைகளின் விலை உயர்வு தான்.

மார்ச் மாதத்தில் காய்கறிகள் விலை குறைந்துள்ள போதிலும் மொத்த விலை பணவீக்கம் நான்கு மாத உயர்வைத் தொட்டு உள்ளது.

இது சூப்பர் நியூஸ்.. கச்சா எண்ணெய் விலை குறையலாம்.. நிபுணர்களின் செம கணிப்பு..!

மொத்த விலை பணவீக்கம்

மொத்த விலை பணவீக்கம்

திங்கட்கிழமை மத்திய அரசு சார்பில் வெளியிடப்பட்ட தரவுகளின்படி, மொத்த விலை பணவீக்கம் ஏப்ரல் 2021 முதல் தொடர்ந்து 12வது மாதமாக இரட்டை இலக்கில் உள்ளது. இதற்கு முன்பு நவம்பர் 2021ல் மொத்த விலை பணவீக்கம் 14.87 சதவீதமாக இருந்தது, தற்போது மார்ச் மாதத்தில் 14.55 சதவீதமாக உள்ளது.

உணவுப் பொருட்கள் பணவீக்கம்

உணவுப் பொருட்கள் பணவீக்கம்

பிப்ரவரி மாதம் இதன் அளவு 13.11 சதவீதமாக இருந்தது, கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இது 7.89 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. மார்ச் 2022ல் உணவுப் பொருட்களின் பணவீக்கம் பிப்ரவரியில் 8.19 சதவீதத்தில் இருந்து 8.06 சதவீதமாகக் குறைந்துள்ளது.

 கச்சா எண்ணெய், உற்பத்தி பொருட்கள்
 

கச்சா எண்ணெய், உற்பத்தி பொருட்கள்

பிப்ரவரியில் 26.93 சதவீதமாக இருந்த காய்கறி பணவீக்கம் 19.88 சதவீதமாகக் குறைந்துள்ளது. ஆயினும் கச்சா எண்ணெய், உற்பத்தி பொருட்கள், பிற இறக்குமதி வர்த்தகப் பொருட்களின் விலை அதிகரித்துள்ளதால் மொத்த விலை பணவீக்கம் 14.55 சதவீதமாக உயர்ந்து உள்ளது.

வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

ரஷ்யா-உக்ரைன் போர் மூலம் ஏற்பட்ட உலகளாவிய விநியோகச் சங்கிலி பாதிப்புக் காரணமாக, மார்ச் 2022 இல், கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, கனிம எண்ணெய்கள், அடிப்படை உலோகங்கள் போன்றவற்றின் விலைகள் உயர்வதன் வாயிலாக மொத்த விலை பணவீக்கம் உயர்ந்துள்ளது என மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

 பெட்ரோலியம் பொருட்கள்

பெட்ரோலியம் பொருட்கள்

மேலும் மார்ச் மாதத்தில் உற்பத்தி பொருட்கள் மீதான பணவீக்கம் 10.71 சதவீதமாகவும், எரிபொருள் மீதான பணவீக்கம் 34.52 சதவீதமாகவும், பெட்ரோலியம் பொருட்கள் மீதான பணவீக்கம் 83.56 சதவீதமாகவும் உயர்ந்துள்ளது. இதேவேளையில் ரீடைல் பணவீக்கம் மார்ச் மாதத்தில் 6.95 சதவீதமாக உயர்ந்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

wholesale price inflation hits 4-month high of 14.55 pc in Mar

wholesale price inflation hits 4-month high of 14.55 pc in Mar 4 மாத உச்சத்தில் மொத்த விலை பணவீக்கம்.. கச்சா எண்ணெய் விலை உயர்வின் எதிரொலி..!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.