ஆலியா பட் திருமண நிகழ்வான மெஹந்தி நிகழ்ச்சியில் அணிந்திருந்த லெஹங்கா குறித்து விளக்கி வாய்பிளக்க வைத்திருக்கிறார் பிரபல ஆடை வடிவமைப்பாளர் மனீஷ் மல்ஹோத்ரா.
பாலிவுட் நட்சத்திரங்களான ஆலியா – ரன்பீர் திருமணம் ஏப்ரல் 14ஆம் தேதி நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் மும்பையில் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு அவர்களுடைய மெஹந்தி நிகழ்ச்சி புகைப்படங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. அதில் அவர் அணிந்திருந்த அழகிய பிங்க் நிற லெஹங்காவை பிரபல ஆடை வடிவமைப்பாளர் மனீஷ் மல்ஹோத்ரா தயாரித்திருந்தார்.
இந்த ஆடையின் வடிவமைப்பு மற்றும் அதிலுள்ள டிசைன்கள் குறித்து மனீஷ் மல்ஹோத்ரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “ஒரு கண்டுபிடிக்கக்கூடிய புதையல் மற்றும் நம்பிக்கை. அழகிய ஆலியா பட் தனது மெஹந்தி நிகழ்ச்சிக்கு இதனை தேர்வுசெய்தார். தோராயமாக 180 டெக்ஸ்டைல்ஸ்களின் பேட்ச்கள் ஒன்றிணைந்து அவரின் முக்கிய சந்தர்ப்பத்தை மறக்கமுடியாத ஒன்றாக மாற்றியிருக்கிறது.
இது மிகவும் சிறப்பான ஒன்று. அந்த ஆடையில் அவருடைய பழக்கவழக்கங்கள் மற்றும் பயணங்கள் போன்றவற்றின் குறியீடுகள் சித்தரிக்கப்பட்டுள்ளன. அதில் காஷ்மீரி மற்றும் சிக்கன்காரி வேலைபாடுகள் அடங்கியுள்ளன. பிங்க் நிற லெஹங்காவில் சிக்கலான கைவேலையான ஃபிச்சியா வேலைபாடும், ப்ளவுசில் சுத்தமான தங்கம் மற்றும் வெள்ளி இழைகளால் நக்ஷி மற்றும் கோரா ஃப்ளவர்கள் டிசைன்கள் மற்றும் கட்ச்சிலிருந்து(Kutch) கொண்டுவரப்பட்ட பழமையான தங்க உலோக சீக்வின் வேலைப்பாடுகளும் அமைக்கப்பட்டுள்ளன.
குறுக்கு தையல் நுட்பத்தை பயன்படுத்தி அனைத்து வேலைப்பாடுகளையும் இணைத்து இந்த ஆடையை தயாரிக்க கிட்டத்தட்ட 3000 மணிநேரம் ஆயிற்று. மனீஷ் மல்ஹோத்ராவின் முந்தைய பிரம்மாண்ட திருமண உடைகளிலிருந்து பனாரசி ப்ரோகேட்ஸ், ஜாக்கார்ட், பாந்தனி மற்றும் கச்சா ரேஷம் நாட்ஸ் போன்றவையும் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளன. அனைத்து காதல் கதைகளும் தனித்துவமானவை’’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
View this post on Instagram