"`அஜித் – 61' கதை மைக் மோகனிடம்தான் முதலில் சென்றது!" – சில்வர் ஜூப்ளி நாயகன் ரிட்டர்ன்ஸ் சீக்ரெட்

வெள்ளிவிழா நாயகன் மைக் மோகன், மீண்டும் ஹீரோவாக களம் இறங்கியிருக்கும் ‘ஹரா’ படத்தின் ஷூட்டிங் மூன்றாவது ஷெட்யூல் செல்ல உள்ளது. சமீபத்தில் வெளியான இதன் டைட்டில் டீசர், பத்து லட்சம் பார்வையாளர்களை நெருங்கியிருப்பதில் மகிழ்ச்சியில் திளைக்கிறது மோகன் வட்டாரம்.

நடிகர் மோகன், கடந்த 2008ல் ‘சுட்டபழம்’ படத்தில் நடித்தார். அதன்பிறகு நடிப்பில் இருந்து சில காலம் ஒதுங்கி இருந்தவரை மீண்டும் ஹீரோவாக அழைத்து வந்திருக்கிறார் ‘தாதா 87’, ‘பவுடர்’ படங்களின் இயக்குநர் விஜய் ஶ்ரீ.

மோகன்

“பொதுவா என்னோட படங்களில் கதைகளம் மட்டுமல்ல. அதன் கதை நாயகர்களாலும் அந்தப் படம் கவனிக்கப்படணும்னு விரும்புவேன். ரஜினி சாருக்கே படம் பண்ணினாக்கூட அவரது ஒரிஜினல் லுக்லயே படம் இயக்கணும்னுதான் நினைப்பேன். அப்படித்தான் சாருஹாசன் சாரையும், ஜனகராஜ் சாரையும் வச்சு ‘தாதா 87’ பண்ணினேன். அடுத்து நிகில் முருகனை போலீஸ் அதிகாரியாக வைத்து ‘பவுடர்’ படத்தையும் முடிச்சிட்டேன்.

மோகன் சாரை வைத்து படம் பண்ணனும் என்பது ரொம்ப வருஷமா ஆசைப்பட்ட விஷயம். ஏன்னா, தமிழ்ல ஸ்டார்ஸ் நிறைய பேர் இருக்காங்க. ஆனா, சில்வர் ஜூப்ளி ஸ்டார்னு யாரும் இல்லையே! மோகன் சார் இன்னமும் அந்த இடத்துலதானே இருக்கார். நான் மோகன் சாரை சந்திச்ச பிறகு தொடர்ந்து ரெண்டு வருஷமா அவரை ஃபாலோ பண்ணிட்டு இருந்தேன்.

இதுல ஆச்சரியமான விஷயம், கடந்த ரெண்டு வருஷமாவே மோகன் சாரும் கதைகள் கேட்டுட்டுதான் இருந்தார். நல்ல கதை அமையும் போது பண்ணலாம்னு இருந்தார். வங்கிக் கொள்ளைத் தொடர்பான ‘அஜித்-61’ படத்தின் கதையைக் கூட, அந்தப் படத்தின் இயக்குநர் இதுக்கு முன்னாடி மோகன் சார்கிட்டதான் சொல்லியிருக்கார். மோகன் சாருக்கும் அந்தக் கதை தெரியும்.

மோகனுடன் விஜய் ஶ்ரீ

நான் அவர்கிட்ட என்னுடைய ‘ஹரா’ கதையைச் சொன்ன போது, ‘நானும் இப்படி ஒரு கதையைத்தான் எதிர்பார்த்தேன்’னு சொன்னார். அதுவே பாதி சக்சஸா ஃபீல் ஆச்சு. படத்துல மோகன் சாருக்கு ஜோடியா குஷ்பு நடிக்கிறாங்க. தமிழ்ல முதல்முறையா இந்த காம்பினேஷன் கலக்கப்போகுது. இவங்க தவிர மொட்டை ராஜேந்திரன், யோகி பாபு, மனோபாலா, மைம் கோபி, ஆதவன்னு கதைக்கான ஆட்கள் நிறைய பேர் இருக்காங்க.

சென்னையிலும், கோவையிலும் ஷூட்டிங் போன போதுதான் மோகன் சாருக்கு இன்னமும் ரசிகர்கள் அப்படியே இருக்காங்கனு தெரிஞ்சது. குறிப்பா பெண் ரசிகைகள் அவருக்கு அதிகம் இருக்காங்கனு தெரிஞ்சது. அதனாலதான் டைட்டில் டீசர் பத்து லட்சம் வியூஸ் ரீச் ஆகியிருக்கு. படப்பிடிப்பு இன்னும் இருக்கு. படத்தைத் தீபாவளிக்குக் கொண்டு வர்றோம்” என்கிறார் விஜய் ஶ்ரீ.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.