ரஷ்ய டி.வி-யில் தோன்றிய உக்ரைனில் சிறைபிடிக்கப்பட்ட பிரித்தானியர்கள்! காப்பாற்றுமாறு போரிஸுக்கு கோரிக்கை


உக்ரைனில் சிறைபிடிக்கப்பட்ட பிரித்தானிய வீரர்கள் இருவர், ரஷ்ய டி.வி-யில் தோன்றி பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

சில தினங்களுக்கு முன் பிரித்தானியா வீரர்களான Shaun Pinner மற்றும் Aiden Aslin ஆகியோர் உக்ரைனில் ரஷ்ய படைகளால் சிறைபிடிக்கப்பட்டனர்.

இந்நிலையில், இன்று ரஷ்ய அரசு டி.வி-யில் தோன்றிய Shaun Pinner மற்றும் Aiden Aslin இருவரும், தங்களை மீட்டு நாட்டிற்கு அழைத்து வரும்படி பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதாவது, தங்களுக்கு ஈடாக உக்ரைன் படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள ரஷ்ய ஆதரவு அரசியல்வாதி Viktor Medvedchuk-ஐ ரஷ்யாவிடம் கொடுத்து, தங்களை மீட்குமாறு பிரித்தானியா வீரர்கள் இருவரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நான் வீட்டுக்கு போகனும்… பதுங்கு குழியில் வசிக்கும் உக்ரேனிய சிறுமியின் உருக வைக்கும் காணொளி 

முன்னதாக, தனக்கு ஈடாக மரியுபோலில் சிறைபிடிக்கப்பட்ட மக்கள் மற்றும் துருப்புகளை உக்ரைனிடம் கொடுத்து, அவர்களிமிருந்து தன்னை மீட்குமாறு Viktor Medvedchuk ரஷ்ய அதிபர் புடினுக்கு கோரிக்கை விடுக்கும் வீடியோவை உக்ரேனிய பாதுகாப்பு சேவை வெளியிட்டிருந்தது.

அதைத்தொடர்ந்து, சில நிமிடங்களில் ரஷ்ய அரசு டி.வி-யில் பிரித்தானியர்கள் தோன்றி போரிஸ் ஜான்சனுக்கு கோரிக்கை விடும் வீடியோ ஒளிபரப்பப்பட்டது.

இதனிடையே, சர்வதேச சட்டங்களுக்கு இணங்க சிறைபிடிக்கப்பட்டவர்களை போர் குற்றவாளிகளாக நடத்த வேண்டும் என Shaun Pinner குடும்பத்தினர் அழைப்பு விடுத்துள்ளதாக பிரித்தானியா வெளியுறவுத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.