கேஜிஎப் 3ம் பாகம்: இயக்குனர் தகவல்

கேஜிஎப் 3ம் பாகம்: இயக்குனர் தகவல்

கேஜிஎப் 3ம் பாகம்: இயக்குனர் தகவல்

4/18/2022 6:16:16 PM

சமீபத்தில் வெளியான கேஜிஎப் படத்தின் 2ம் பாகம் பெரும் வரவேற்பை பெற்றிருப்பதோடு, வசூல் சாதனையும் படைத்துள்ளது. இந்த நிலையில் கேஜிஎப் படத்தின் 3ம் பாகம் வரவேண்டும் என்கிற ஆர்வமும் ரசிகர்களுக்கு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்த படத்தின் இயக்குனர் பிரசாந்த் நீ்ல் அளித்த பேட்டி ஒன்றில் “கேஜிஎப் படத்தின் 3ம் பாகத்தின் முதல்கட்ட பணிகள் தொடங்கி விட்டது.

இதில் யார் நடிப்பார்கள் உள்ளிட்ட வேறு எந்த விஷயங்களும் முடிவு செய்யப்படவில்லை” என்று கூறியிருக்கிறார். இதனால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர் பிரசாந்த் நீல் தற்போது பிரபாஸ் நடிக்கும் சலார் படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் 30 சதவீதம் மட்டுமே முடிந்துள்ளது. அதனால் எஞ்சியுள்ள 70 சதவீத படப்பிடிப்பை முடித்த பின்னரே அவர் கே.ஜி.எஃப் 3 படத்தின் பணிகளை தொடங்குவார் என்றும் கூறப்படுகிறது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.