அரசு சொற்ப உதவித் தொகை; மாற்றுத் திறனாளிகளுக்கு அவமானம்: ஐகோர்ட் கண்டனம்

Disabled allowance very low, Chennai High Court dissatisfaction: சொற்ப அளவிலான உதவித் தொகை வழங்கி மாற்றுத் திறனாளிகளை அவமானப்படுத்த வேண்டாம் என சமூக நலத்துறை மீது சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

பார்வை மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித் தொகையை அதிகரித்து தர உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு இன்று, தலைமை நீதிபதி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது சொற்ப அளவிலான உதவித் தொகை வழங்கி மாற்றுத்திறனாளிகளை அவமானப்படுத்த வேண்டாம். சொற்ப அளவிலான உதவித் தொகையை வழங்குவதை விட அதை நிறுத்தி விடலாம் என தலைமை நீதிபதி சமூக நலத்துறை மீது அதிருப்தி தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்: கண்ணாடி பாட்டில்கள்… டாஸ்மாக் நிர்வாகத்திற்கு ஐகோர்ட் எச்சரிக்கை!

மேலும், தற்போதைய விலைவாசியில், மாதம் ரூ.1000 மற்றும் ரூ.1500 உதவித்தொகை என்பது எப்படி போதுமானதாக இருக்கும் என கேள்வி எழுப்பிய நீதிமன்றம், உதவித் தொகையை அதிகரித்து வழங்கும் விஷயத்தில் சமூக நலத்துறை செயலாளர் அக்கறையுடன் செயல்பட வில்லை என அதிருப்தி தெரிவித்தது.

மேலும் சமூக நலத்துறை முதன்மைச் செயலாளர் நேரில் ஆஜராகவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.