காங்கிரசில் தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த்?

புதுடில்லி, : தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோரை காங்கிரஸ் கட்சியில் சேர்த்துக் கொள்வது தொடர்பாக அக்கட்சியின் முக்கிய தலைவர்களுடன் சோனியா ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர், ‘ஐ பேக்’ என்ற நிறுவனம் வாயிலாக பல்வேறு கட்சிகளுக்கும் தேர்தல் ஆலோசனைகளை வழங்கி வருகிறார்.

விருப்பம்கடந்த 2014 லோக்சபா தேர்தலில், இவரது நிறுவனம் பா.ஜ.,வுக்கான தேர்தல் வியூகங்களை வகுத்து தந்தது. பின், மேற்கு வங்கத்தில் திரிணமுல் காங்கிரஸ், ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ், தமிழகத்தில் தி.மு.க., உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் ஆட்சியை பிடிக்க இவரது ஆலோசனைகள் உதவி உள்ளன. காங்கிரஸ் கட்சிக்கு புத்துயிர் அளித்து, அக்கட்சியை மீண்டும் ஆட்சியில் அமர செய்ய தன்னிடம் திட்டங்கள் இருப்பதாக கடந்த ஆண்டு தெரிவித்த பிரசாந்த் கிஷோர், அக்கட்சியில் தன்னை இணைத்துக் கொள்ள விருப்பம் தெரிவித்தார். இதற்கு காங்கிரஸ் கட்சிக்குள் பல்வேறு தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து அந்த பேச்சு முடிவுக்கு வந்தது. தற்போது மீண்டும் காங்கிரஸ் தலைமையுடன் பிரசாந்த் கிஷோர் பேச்சு நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

காங்., – எம்.பி., ராகுலை சந்தித்த பிரசாந்த் அவரிடம் சில முக்கிய ஆலோசனைகளை கூறியுள்ளதாக தெரிகிறது.அதன்படி, 2024 லோக்சபா தேர்தலில் 370 இடங்களில் காங்., போட்டியிடவும், மற்ற இடங்களில் கூட்டணி கட்சியினரை நிறுத்தவும் அவர் பரிந்துரைத்ததாக கூறப்படுகிறது. கூட்டணிஇதையடுத்து, உத்தர பிரதேசம், பீஹார், ஒடிசாவில் காங்., தனித்து போட்டியிடும்; மஹாராஷ்டிரா, மேற்கு வங்கம், தமிழகத்தில் கூட்டணி அமைத்து போட்டியிடும். இந்த ஆலோசனைக்கு ராகுல் ஒப்புக் கொண்டதாக டில்லி வட்டாரங்கள் கூறுகின்றன.அவகாசம்மேலும், காங்.,கில் இணையவும் பிரசாந்த் கிஷோர் விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து, இவரை கட்சியில் சேர்த்துக் கொள்வது தொடர்பாக, முக்கிய தலைவர்களுடன் சோனியா ஆலோசனை நடத்தவுள்ளார். இக்கூட்டத்தில் காங்., பொது செயலர் பிரியங்கா, மூத்த தலைவர்கள் முகுல் வாஸ்னிக், ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, கே.சி.வேணுகோபால், அம்பிகா சோனி உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளதாக தெரிகிறது.பிரசாந்த் கிஷோரின் திட்டம் குறித்து மே2க்குள் பதில் அளிக்க காங்கிரஸ் கட்சிக்கு அவகாசம் அளிக்கப்பட்டு உள்ளதாகவும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.