சீனாவின் பொருளாதாரம் மிதமான வளர்ச்சி| Dinamalar

பீஜிங், : இந்தாண்டு ஜன., – மார்ச் வரையிலான முதல் காலாண்டில், சீனாவின் பொருளாதாரம், 4.8 சதவீதமாக மிதமான வளர்ச்சி கண்டுள்ளது. இது, முந்தைய காலாண்டில், 4 சதவீதமாக இருந்தது. கொரோனா பரவலை தடுக்க, ஷாங்காய் உள்ளிட்ட முக்கிய தொழில் நகரங்களில், ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட நிலையிலும், சீனாவின் பொருளாதாரம் மிதமான வளர்ச்சி கண்டுள்ளது.

எனினும், இது உத்தேச மதிப்பீடான, 5.5 சதவீதத்தை விட குறைவாகும். சீன அரசு, கொரோனா வால் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தை சீர் செய்யும் நோக்கில், தொழில் துறையினர் செலுத்திய வரியை திரும்பத் தருவதாக அறிவித்துள்ளது. அத்துடன், அவர்களுக்கான ஊக்குவிப்பு திட்டங்களை விரைந்து செயல்படுத்துமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. இதனால், கடந்த ஆண்டை விட, இந்தாண்டின் முதல் காலாண்டில், சில்லரை விற்பனை 3.3 சதவீதமாக மிதமான வளர்ச்சி அடைந்துள்ளது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.