ஆளுநர் பங்கேற்ற பட்டமளிப்பு விழாவில் பங்கேற்காமல் தவிர்த்த தமிழ்நாடு அமைச்சர்கள்

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் பங்கேற்ற நிலையில் அமைச்சர்கள் பொன்முடி, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோர் அதில் கலந்துகொள்ளாமல் நிராகரித்துள்ளனர்.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா நேற்று மாலை நடைபெற்றது. அதில் ஆளுநரும் பல்கலைக்கழக வேந்தருமான ஆர்.என்.ரவி பங்கேற்றார். விழாவில் 1,234 மாணவர்களுக்கு பதக்கங்கள் மற்றும் பட்டங்களை அவர் வழங்கி உரையாற்றினார். அப்போது அவர், `நமது நாட்டில் அபரிமிதமான திறமைகள், வளங்கள் இருந்த போதிலும் நாம் தொட வேண்டிய உச்சத்தை அடைய முடியவில்லை. அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா உலகின் முதல் நாடாக இருக்க வேண்டும்’ என்று வலியுறுத்தினார். இஸ்ரோ முன்னாள் இயக்குனர் டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை உள்ளிட்ட பலர் இவ்விழாவில் பங்கேற்றனர்.
image
பல்கலைக்கழக இணை வேந்தரான உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சரான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோரது பெயர் அழைப்பிதழில் இடம்பெற்றநிலையில் அவர்கள் பங்கேற்கவில்லை. நீட் தேர்வு விலக்கு மசோதா விவகாரம் காரணமாக ஆளுநரின் தேநீர் விருந்தை முதல்வர் உள்ளிட்ட அமைச்சரவை புறக்கணித்த நிலையில், ஆளுநர் பங்கேற்ற பட்டமளிப்பு விழாவை அமைச்சர்கள் புறக்கணித்துள்ளனர்.
சமீபத்திய செய்தி: இலங்கைக்கு அனைத்து உதவிகளும் அளிக்கப்படும் – நிர்மலா சீதாராமன் உறுதிSource : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.