20000 ஹெக்டர் நிலத்தை கைப்பற்றிய தமிழ்நாடு அரசு.. எதற்காக தெரியுமா..?

தமிழ்நாடு அரசு பல்வேறு வளர்ச்சி திட்டத்தைக் கையில் எடுத்துள்ள நிலையிலும், புதிதாக உற்பத்தி தளத்தை அமைக்கும் விருப்பம் தெரிவிக்கும் நிறுவனங்களுக்குப் போதுமான நிலத்தை அளிக்க வேண்டும் என்பதற்காகத் தமிழ்நாடு அரசு அதிகப்படியான நிலத்தைக் கைப்பற்றி வருகிறது.

அப்படி எந்தத் திட்டத்திற்காக, எந்த ஊரில் அதிகம் நிலத்தைத் தமிழக அரசு கைப்பற்றியுள்ளது தெரியுமா..?

தமிழக அரசு

தமிழக அரசு மற்றும் ஒன்றிய அரசின் பல்வேறு வளர்ச்சி திட்டங்களைச் செயல்படுத்துவதற்காகத் தமிழ்நாடு அரசு சுமார் 20000 ஹெக்டர் நிலத்தைத் தற்போது கைப்பற்றித் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. ஒரு ஹெக்டர் என்றால் 2.47 ஏக்கர், அப்படியாலான தமிழக அரசு 49,421 ஏக்கர் நிலத்தைக் கைப்பற்றியுள்ளது.

20000 ஹெக்டர் நிலம்

20000 ஹெக்டர் நிலம்

மேலும் அரசு கைப்பற்றியுள்ள நிலத்தைச் சரியான முறையில் நிர்வாகம் செய்யத் தமிழ்நாடு அரசின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை புதிதாக நிலம் கைப்பற்றல் அமைப்பை (LAATAN) உருவாக்க உத்தரவிட்டுள்ளது.

 கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன்
 

கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன்

இந்த அமைப்பு மூலம் நிலம் கைப்பற்றல், பத்திர சரிபார்ப்பு, நிதி ஒதுக்கீடு, விலை நிர்ணயம் மற்றும் பிற நில கைப்பற்றல் தொடர்பான அனைத்து நடவடிக்கைகள் எடுக்க உதவும் என வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

 LAATAN அமைப்பு

LAATAN அமைப்பு

LAATAN அமைப்பின் தலைவராக வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் முதன்மைச் செயலர் நியமிக்கப்படுவதோடு, தொழில்கள், நீர்வளம், நெடுஞ்சாலைகள் மற்றும் நிதித்துறையைச் சேர்ந்த முக்கிய அதிகாரிகள் உறுப்பினர்களாகக் கொண்ட குழு இவ்வமைப்பின் செயல்பாட்டை மேற்பார்வையிட்டு, பணிகளை ஒழுங்கு முறைப்படுத்தும்.

முக்கியத் திட்டங்கள்

முக்கியத் திட்டங்கள்

தற்போது கைப்பற்றப்பட்டு உள்ள 20000 ஹெக்டர் நிலம் சென்னை ரிங்க் ரோடு திட்டங்கள், சென்னை-கன்னியாகுமரி தொழில்துறை தாழ்வார திட்டம், பல டவுன் மற்றும் நகரங்களில் கட்டப்படும் மேம்பாலம், சாலை திட்டங்கள், மற்றும் ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, தருமபுரி, ஓசூர், திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி-யில் அமைக்கப்படும் தொழிற்பேட்டைகளுக்கும் பயன்படுத்தப்படும்.

ஒசூர்

ஒசூர்

தமிழ்நாடு அரசு தற்போது ஒசூர் மற்றும் கிருஷ்ணகிரி பகுதியை மிகப்பெரிய தொழிற்பேட்டையாக மாற்றும் திட்டத்தை முக்கியமானதாகக் கையில் எடுத்துள்ளது. இந்தியச் சந்தை விற்பனைக்காக உற்பத்தி தளத்தை அமைக்கும் பல நிறுவனங்கள் இப்பகுதியில் உற்பத்தி தளத்தை அமைக்கத் தயாராகி வரும் நிலையில் தமிழக அரசு சுமார் 2400 ஏக்கர் நிலத்தைக் கைப்பற்றத் திட்டமிட்டு அதற்கான பணிகளைச் செய்து வருகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Tamilnadu govt acquires 20,000 hectares of land; order to setup Land acquisition Agency LAATAN

Tamilnadu govt acquires 20,000 hectares of land; order to setup Land acquisition Agency LAATAN 20000 ஹெக்டர் நிலத்தைக் கைப்பற்றிய தமிழ்நாடு அரசு.. எதற்காகத் தெரியுமா..?

Story first published: Tuesday, April 19, 2022, 10:22 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.