தான் போரில் கொல்லப்பட்டு விட்டால், தன் பிள்ளை அநாதரவாகிவிடக்கூடாது என்பதற்காக, தன் பிள்ளையின் முதுகில் அவளது பெயர், பிறந்த திகதி மற்றும் தொலைபேசி எண்களை எழுதிவைத்தார் ஒரு உக்ரைனியப் பெண்.
அந்தப் பெண்ணின் பெயர் Sasha Makoviy (33). அந்தக் குழந்தையின் பெயர் Vira Makoviy (2).
காண்போரின் மனதைப் பதற வைத்த அந்தப் படம், இணையத்தில் வேகமாகப் பரவி, போரால் சாதாரண பெற்றோர் எதிர்கொள்ளும் பயங்கர நிலையை உலகுக்கு உரக்கக் கூறியது.
ஆனால், தற்போது அந்தப் பெண்ணும் அவரது குழந்தை Viraவும் பிரான்சில் பத்திரமாக இருக்கிறார்கள். Lespignan என்னும் பிரெஞ்சுக் கிராமத்தில் Sashaவின் தாயுடன் அவர்கள் வாழ்ந்து வருகிறார்கள்.
போர் துவங்கியதும் உக்ரைன் தலைநகர் Kyivஐ விட்டு உயிர் தப்ப ஓடிவந்த அந்த பயம் நிறைந்த தருணத்தை நினைவுகூரும் Sasha, ஒருவேளை போரில் தான் இறந்துவிட்டால், Viraவுக்கு தான் யார், தன் பெற்றோர் யார் என்பதே தெரியாமல் போய்விடக்கூடாது என தான் அஞ்சியதாக தெரிவிக்கிறார்.
ஆனால், தான் அன்று பயந்து நடுங்கிக்கொண்டிருந்ததால், பதற்றத்தில் ஒரு தொலைபேசி எண்ணை தவறாக எழுதிவிட்டதை பிறகுதான் கவனித்ததாக தெரிவிக்கிறார் Sasha!