தமிழகம், கேரளத்திலும் இவருக்கும், இவரது திரைப்படங்களுக்கும் தனி ரசிகர் கூட்டம் உண்டு.தெலுங்கு நடிகர்களில் தனிப்பெரும் சக்தி வாய்ந்தவர்
மகேஷ்பாபு
.தெலுங்குத் திரையுலகில் சிரஞ்சீவிக்கு பிறகு ஆந்திரா ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்படுபவர் மகேஷ் பாபு.
பார்வையால் மிரட்டுவது, ஷார்ப்பான லுக், ரொமாண்டிக்கான பேச்சு மகேஷ்பாபுவின் தனி ஸ்டைல். இவர் நடித்த ஒரு சில திரைப்படங்கள் தமிழில்
போக்கிரி
, கில்லியாகவும் வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றன.
Dhanush:மீண்டும் லீக்கான தனுஷ், நித்யா மேனன் வீடியோவால் பரபரப்பு
ஏ.ஆர் முருகதாஸ்
இயக்கத்தில் இவர் நடித்த ஸ்பைடர் திரைப்படம் சரியாக போகவில்லை. இருப்பினும் இவரது சில படங்கள் அவ்வப்போது தமிழில்
ரிலீஸ்
ஆகி வருகின்றன.
பரத் எனும் நான்
என்ற படம் தெலுங்கில் இருந்து தமிழுக்கு வந்தது இதில் முதலமைச்சராக மகேஷ்பாபு நடித்திருந்தார்.
நடிகர் மகேஷ் பாபு Audi E-tron என்ற எலக்ட்ரின் எஸ்.யூ.வி. ரக கார் ஒன்றை புதிதாக வாங்கியுள்ளார். இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், எலக்ட்ரானிக் கார் ஒன்றை வீட்டிற்கு வரவேற்பதாகவும். சுற்றுச்சுழலுக்கு கேடு விளைவிக்காத, மற்றும் நிலைத்த எதிர்காலத்திற்கு வழிவகுக்கும் ஆடி-ஈ-ட்ரான் எப்படி இருக்கும் என்று பயன்படுத்தவும், ஆடி காரின் அனுபத்தையும் பெற ஆர்வமுடன் இருக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
மகேஷ் பாபு வாங்கி உள்ள Audi E-tron வகை கார்கள் இந்தியாவில் ரூ.1.01 கோடி என்பதிலிருந்து தொடங்கி ரூ.1.19 கோடி வரை விற்பனை செய்யப்படுகிறது. இதன்மூலம் ஆடி எஸ்யூவி கார்களை வைத்திருக்கும் நட்சத்திரங்களின் பட்டியலில் தற்போது நடிகர் மகேஷ் பாபுவும் இணைந்துள்ளார். இதில் பாதுக்கப்புக்காக 8 ஏர் பேக்குகள், மின்னும் சீட் பெல்ட்டுகள், பார்க்கிங் சென்சார்கள், ப்ரீடென்ஷனர்கள் மற்றும்
லோட் லிமிட்டர்கள்
, ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது.
நடிகர் மகேஷ்பாபு சர்க்காரு வாரி பாட்டா என்ற தெலுங்கு படத்தில் நடித்துள்ளார். இதில் அவருக்கு ஜோடியாக
கீர்த்தி சுரேஷ்
நடித்துள்ளார். பரசுராம் இயக்கும் இந்தப் படத்துக்கு தமன் இசை அமைக்கிறார். அவர் இசையில் வெளியான பாடல்கள் வரவேற்பை பெற்றுள்ளன.
பீஸ்ட் படத்தின் அப்டேட்: Exclusive தகவல்!