சென்னை: இந்தி திணிப்பு, பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுக்கு எதிராக சென்னை சைதாப்பேட்டையில் மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒன்றிய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.