இசைஞானி இளையராஜா இசையில் சிபிராஜ் நடித்துள்ள படம் மாயோன். இந்தப் படத்தின் டீசர் கடந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படம் குறித்து அறிவிப்பு எதுவும் வராமல் இருந்து வந்தது.
இந்நிலையில், சில தினங்களுக்கு முன் நடிகர் சிபிராஜ் இந்தப் படம் குறித்து அப்டேட்டை டுவிட்டரில் வெளியிட்டார்.
அந்தப் பதிவில் படம் ஜூன் 17ஆம் தேதி ரிலீஸாகிறது என்று குறிப்பிட்டுள்ளார். நடிகை தான்யா ரவிச்சந்திரன், ராதாரவி, கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படத்தை அருண் மொழி மாணிக்கம் தயாரித்துள்ளார். சிபிராஜுக்கு இந்தப் படம் நிச்சயம் பெயர் வாங்கித் தரும் என்று திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஜூனியர் என்டிஆரின் அடுத்த பட இயக்குநர்
ஆர்ஆர்ஆர் படத்தில் சிறப்பாக நடித்து பிரமிப்பை ஏற்படுத்திய ஜூனியர் என்டிஆர் அடுத்ததாக பான் இந்தியா படத்தில் நடிக்க உள்ளார்.
இந்தப் படத்தை பிரபல தெலுங்கு இயக்குநர் கொரட்டலா சிவா இயக்கவுள்ளார். இவர் ஏற்கனவே, ஜூனியர் என்டிஆரை ஜனதா கேரேஜ் என்ற ஹிட் படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது இவர் எடுக்கவுள்ள படம் ஜூனியர் என்டிஆருக்கு 30ஆவது படமாகும்.
ஸ்கூபா டைவிங் செய்த நடிகை
நடிகை ராய் லஷ்மி, மங்காத்தா, காஞ்சனா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது இந்தி திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
தனது சமூக வலைதளத்தில் ஆழ்கடலில் நீந்தும் வீடியோவை பகிர்ந்துள்ளார். ரசிகர்களின் லைக்குகளை இந்த வீடியோ அள்ளி வருகிறது.
விஜய் பட இசை அமைப்பாளர்
நடிகர் விஜய் மாஸ்டர், பீஸ்ட் என பேக் டூ பேக் ஹிட் கொடுத்துள்ளார். தற்போது தனது 66ஆவது படத்தில் நடிக்கவும் தொடங்கிவிட்டார்.
இந்தப் படத்தை தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இயக்கி வருகிறார். விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார் மாஸ்டர், பீஸ்ட் ஆகிய படங்களுக்கு அனிருத் இசை அமைத்திருந்தார்.
இந்நிலையில், இந்தப் படத்தின் இசை அமைப்பாளர் யார் என்ற எதிர்பார்ப்பு அதிகம் இருந்து வந்தது.
தற்போது அவர் தமன் என்பது தெரியவந்துள்ளது.
பீஸ்ட் பாக்ஸ் ஆபிஸ் வசூல்; 5 நாட்களில் ரூ.200 கோடியைத் தாண்டியது
தெலுங்கில் அதிக படங்களுக்கு தமன் இசை அமைத்து வருவது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil