தொடர்ந்து 9 நாட்களாக சரிந்து வரும் ஹெச் டி எஃப் சி வங்கியின் பங்கு விலையானது, 9% மேலாக சரிவில் காணப்படுகிறது. இது குறைந்த விலையில் வாங்க சரியான இடமா?
வாங்கலாமா? வேண்டாமா? அடுத்து என்ன செய்யலாம்? நிபுணர்களின் கணிப்பு என்ன? வாருங்கள் பார்க்கலாம்.
இன்று காலை தொடக்கத்திலேயே இப்பங்கின் விலையானது 2 சதவீதத்திற்கு மேலாக சரிவில் காணப்பட்டது. இது இன்னும் சரியுமா? அல்லது மீண்டும் அதிகரிக்குமா? நிபுணர்களின் கணிப்பு என்ன? வாருங்கள் பார்க்கலாம்.
முதலீட்டாளர்களுக்கு சர்பிரைஸ் கிடைக்குமா.. ஹெச்டிஎஃப்சி வங்கியின் முடிவென்ன?
9% மேலாக சரிவில் பங்கு விலை
கடந்த 5 வர்த்தக அமர்வில் மட்டும் இப்பங்கின் விலையானது 9 சதவீதத்திற்கும் மேலாக சரிவில் காணப்படுகின்றது. இதே காலக்கட்டத்தில் சென்செக்ஸ் 3% மேலாக சரிவில் காணப்படுகின்றது. ஹெச்டிஎஃப்சி வங்கியின் காலாண்டு முடிவானது நேர்மறையாக வந்தாலும், அது எதிர்பார்ப்பு மதிப்பீட்டுக்கும் குறைவாக லாபம் கண்டுள்ளது. இவ்வங்கி கடந்த மார்ச் காலாண்டில் கடந்த ஆண்டினை காட்டிலும் 23% லாபம் அதிகரித்து காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இணைப்பு நடவடிக்கை
இதே இவ்வங்கியின் வட்டி வருவாயானது அதிகரித்த நிலையில், லாபமும் அதிகரித்துள்ளது. முன்னதாக இவ்வங்கி அதன் துணை நிறுவனமான ஹெச்டிஎஃப்சி-யினை இணைக்க திட்டமிட்டுள்ளதாக அறிவித்தது. இதன் மூலம் இதன் சந்தை மதிப்பானது மிகப்பெரியளவில் அதிகரிக்கலாம். இதன் வணிக வளர்ச்சியும் மேம்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பங்கு விலை அதிகரிக்கலாம்
எனினும் இந்த இணைப்பு குறித்தான அறிவிப்புக்கு பிறகு இவ்வங்கியின் பங்கு விலையானது, அதன் உச்சத்தில் இருந்து 20% மேலாக சரிவில் காணப்படுகின்றது. எனினும் வங்கியின் நீண்டகாலத்திற்கு இவ்வங்கியின் இணைப்பு நடவடிக்கையானது சாதகமாக அமையலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர். இதன் வளர்ச்சி கூடலாம். மார்ஜின் விகிதமும் அதிகரிக்கும். மொத்தத்தில் இவ்வங்கி பங்கின் விலையானது அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆக இப்பங்கினை வாங்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
இலக்கு விலை
கடந்த மார்ச் காலாண்டில் நிகர வட்டி வருவாயானது, அதாவது வட்டி வருமானம் மற்றும் வட்டி செலவுகளுக்கு இடையேயான விகிதம் 10% அதிகரித்து, 18,872 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதற்கிடையில் இவ்வங்கி பங்கின் விலையில் புராபிட் புக்கிங் காரணமாக சற்று திருத்தம் இருக்கலாம். இது 1350 ரூபாய் என்ற லெவலை எட்டலாம். எனினும் இலக்கு விலையானது மீடியம் டெர்மில் 1650 ரூபாய் ஆக கணித்துள்ளது ஷேர் இந்தியா நிறுவனம்.
தற்போதைய நிலவரம் என்ன?
இவ்வங்கியின் பங்கு விலையானது என் எஸ் இ-யில் தற்போது 2.82% குறைந்து, 1356.10 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது இன்றைய உச்ச விலை 1389.55 ரூபாயாகவும், இதே இன்றைய குறைந்தபட்ச விலை 1348 ரூபாயாகவும் உள்ளது. இதன் 52 வார உச்ச விலை 1725 ரூபாயாகும். இதே 52 வார குறைந்தபட்ச விலை 1292 ரூபாயாகும்.
இதே பி எஸ் இ-யில் 2.80% குறைந்து, 1355.60 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது இன்றைய உச்ச விலை 1388.60 ரூபாயாகவும், இதே இன்றைய குறைந்தபட்ச விலை 1348.05 ரூபாயாகவும் உள்ளது. இதன் 52 வார உச்ச விலை 1724.30 ரூபாயாகும். இதே 52 வார குறைந்தபட்ச விலை 1292 ரூபாயாகும்.
HDFC bank shares continuously falling for 9th session, is it a right time to buy?
HDFC bank shares continuously falling for 9th session, is it a right time to buy?/9 நாட்களாக தொடரும் சரிவு.. ஹெச்டிஎஃப்சி வங்கியில் முதலீடு செய்யலாமா.. நிபுணர்கள் பலே பரிந்துரை!