வை ராஜா வை படத்திற்கு பிறகு எந்த படத்தையும் இயக்காமல் வீட்டோடு இருந்தார் ஐஸ்வர்யா
ரஜினிகாந்த்
. இந்நிலையில் 7 ஆண்டுகள் கழித்து மீண்டும் படம் இயக்க வந்துவிட்டார்.
ஓ சாத்தி சல் எனும் படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகிறார். இது தவிர்த்து மேலும் ஒரு இந்தி படம், ராகவா லாரன்ஸின் துர்கா படம் ஆகியவற்றை இயக்க ஒப்புக் கொண்டிருக்கிறார் ஐஸ்வர்யா.
ஹேன்ட்சம் ஹீரோ, சேட்டைக்கார ஹீரோவை இயக்க விரும்பும் ஐஸ்வர்யா
அவர் தன் அப்பா ரஜினியின் தீவிர ரசிகை ஆவார். இதை பலமுறை தெரிவித்துள்ளார். அந்த அப்பாவை வைத்து படம் இயக்க ஆசை இருக்கிறதா என்று ஐஸ்வர்யாவிடம் கேட்கப்பட்டது.
அதற்கு அவர் கூறிய பதில் தான் பலரையும் வியக்க வைத்திருக்கிறது.
ஐஸ்வர்யா
கூறியதாவது,
அப்பாவை இயக்குவது பற்றி நினைத்துக் கூட பார்த்தது இல்லை. அவரின் தீவிர ரசிகையாக இருப்பதே சந்தோஷம். ஆனால், அப்பாவை வைத்து படம் இயக்கும் வாய்ப்பு கிடைத்தால், நிச்சயம் பயன்படுத்திக் கொள்வேன் என்றார்.
ஐஸ்வர்யா மட்டும் அல்ல தனுஷும் ரஜினியின் தீவிர ரசிகர். அவருக்கு தன் தலைவரை வைத்து படம் இயக்கும் ஆசை இருக்கிறது. ஆனால் ஐஸ்வர்யாவை பிரிந்த பிறகு தனுஷுக்கு ரஜினி பட வாய்ப்பு கிடைப்பது நடக்காத காரியம் என்று கூறப்படுகிறது.