ரஷ்ய கச்சா எண்ணெய் வாங்கிக் குவிக்க தயாராகும் இந்தியா.. பெட்ரோல், டீசல் விலை குறையுமா..?!

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் மக்களும் பொருளாதாரமும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், ரஷ்யாவின் தள்ளுபடி கச்சா எண்ணெய்யை இந்தியாவால் எப்படி மறுக்க முடியும். அமெரிக்காவில் எச்சரிக்கைகளையும் மீறி ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கத் துவங்கியுள்ளது இந்தியா.

இந்நிலையில் இந்தியக் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் எந்த அளவிற்கு அதிகமாக ரஷ்யா கச்சா எண்ணெய்யை வாங்க முடியுமோ, அதிகளவில் வாங்கத் திட்டமிட்டு வருகிறது.

ரஷ்யா – உக்ரைன் பிரச்சனை.. உலக நாடுகளுக்கு காத்திருக்கும் சவால்கள்..!

ரஷ்ய கச்சா எண்ணெய்

ரஷ்ய கச்சா எண்ணெய்

ரஷ்ய பெட்ரோலியம் நிறுவனங்கள் கச்சா எண்ணெய்க்கான தள்ளுபடியை அறிவித்த நாளில் இந்திய அரசும், இந்திய பெட்ரோலியம் நிறுவனங்களும் தங்களது கொள்முதல் ஆர்டரை வளைகுடா நாடுகளிடம் இருந்து படிப்படியாகக் குறைத்துக்கொண்டு ரஷ்யாவிடம் அதிகரிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

15 மில்லியன் பேரல் எண்ணெய்

15 மில்லியன் பேரல் எண்ணெய்

ரஷ்யா – உக்ரைன் மத்தியிலான போர் துவங்கியது முதல் இந்தியா பல்வேறு வர்த்தகர்கள் மற்றும் ரஷ்ய நிறுவனங்களிடம் இருந்து சுமார் 15 மில்லியன் பேரல் அளவிலான ரஷ்யா கச்சா எண்ணெய்க்கு ஆர்டர் வைத்துள்ளது. இதற்கான பணத்தைத் தற்போது டாலர் வாயிலாகவே இந்தியா செலுத்த முடிவு செய்துள்ளது.

ரஷ்யா - இந்தியா
 

ரஷ்யா – இந்தியா

இந்தியாவின் மொத்த இறக்குமதியில் ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் அளவு மிகவும் குறைவு. இதற்கு முக்கியக் காரணமாக ரஷ்யா – இந்தியா மத்தியிலான சரக்கு போக்குவரத்துச் செலவுகள் மிகவும் அதிகம்.

வெறும் 0.419 மில்லியன் மெட்ரிக் டன்

வெறும் 0.419 மில்லியன் மெட்ரிக் டன்

இது இந்தியாவுக்குச் சுமையாக இருக்கும் காரணத்தால் ரஷ்யாவில் இருந்து மிகவும் குறைவான கச்சா எண்ணெய்யை மட்டுமே இந்திய வாங்கி வந்தது. 2022ஆம் நிதியாண்டில் ரஷ்யாவிலிருந்து இந்தியா 0.419 மில்லியன் மெட்ரிக் டன் (MMT) கச்சா எண்ணெய்யை மட்டுமே இறக்குமதி செய்துள்ளது.

ரஷ்யா- உக்ரைன் போர்

ரஷ்யா- உக்ரைன் போர்

இது இந்தியாவின் ஒட்டுமொத்த கச்சா எண்ணெய் இறக்குமதியான 175.9 MMT உடன் ஒப்பிடும் போது ரஷ்யாவின் 0.419 மில்லியன் மெட்ரிக் டன் (MMT) கச்சா எண்ணெய் மிகவும் குறைவு. ஆனால் பிப்ரவரி 24க்குப் பின் அதாவது ரஷ்யா- உக்ரைன் போர் துவங்கிய பின்பு ரஷ்யா கச்சா எண்ணெய்-க்கான ஆர்டர் அளவு 15 மில்லியன் பேரலாக அதிகரித்துள்ளது.

35 டாலர் தள்ளுபடி

35 டாலர் தள்ளுபடி

ரஷ்யாவின் 35 டாலர் தள்ளுபடியைப் பயன்படுத்திக்கொள்ள இந்திய நிறுவனங்கள் அதிகப்படியான ரஷ்ய கச்சா எண்ணெய்-யை ஆர்டர் செய்துள்ளது. தற்போது இந்த எண்ணெய்யை சேமிப்பதற்கான வழிகளை ஆய்வு செய்யத் துவங்கியுள்ளது.

பெட்ரோல், டீசல் விலை

பெட்ரோல், டீசல் விலை

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை 13 நாட்களாக எவ்விதமான மாற்றமும் இல்லாமல் ஓரே விலையில் இருந்தாலும், அதிகப்படியான விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் ரஷ்ய கச்சா எண்ணெய் வரும் போதும் பெட்ரோல், டீசல் விலை குறைய அதிகப்படியான வாய்ப்பு உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

India refineries plans to store maximum Russian discounted oil; Petrol diesel price may fall

India refinery companies plans to store maximum Russian discounted oil ரஷ்ய கச்சா எண்ணெய் வாங்கிக் குவிக்கத் தயாராகும் இந்தியா.. பெட்ரோல், டீசல் விலை குறையுமா..?!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.