சென்னை:
சட்டசபையில் இன்று தொழிற்துறையின் கொள்கை விளக்கக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
ஓசூர் பகுதியில் புதிய விமான நிலையத்தை உருவாக்குவதற்கு தமிழ்நாடு அரசு முயற்சி மேற்கொண்டு வருவதாக தொழில்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் வடமேற்கு பகுதியில் தொழில் துறையின் வளர்ச்சி, அப்பகுதியின் பொருளாதார வளர்ச்சி, சுற்றுலா, தனிமனித வருவாய் வளர்ச்சி விகிதம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு ஓசூர் பகுதியில் ஒரு புதிய விமான நிலையத்தில் உருவாக்குவதற்கு தமிழ்நாடு அரசு முயற்சி மேற்கொண்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் பகுதி தொழிற்சாலைகளுக்கான மயமாக இருப்பதால் ஓசூரில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கு இப்பகுதியை சுற்றியுள்ள விமான போக்குவரத்துத்துறை மற்றும் அதன் வளர்ச்சி விகிதம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு சாத்தியக்கூறு உள்ள இடங்கள் ஆய்வு செய்யுமாறு டிட்கோவை அரசு பணிந்துள்ளதாகவும், அரசின் அறிவுறுத்தலின்படி ஆய்வை மேற்கொள்வதற்கான ஒரு ஆலோசகரை தேர்வு செய்யும் பணியில் டிட்கோ ஈடுபட்டுள்ளது என்றும் கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்… இலங்கை அரசுக்கு சொந்தமான எண்ணெய் நிறுவனம் எரிபொருள் விலையை உயர்த்தியது