பஸ் கட்டணம் 35 வீதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைவாக தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்து சபை பஸ் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
இன்று (19) நள்ளிரவு முதல் இவ்வாறு கட்டணங்கள் அதிகரிக்கப்படுவதாக அவர் கூறினார்..
இன்று அமைச்சில் நடைபெற்ற தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்திற்கும் போக்குவரத்து அமைச்சிற்கும் இடையிலான பேச்சுவார்த்தையின் போது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ரயில் கட்டணங்களில் எந்தவித அதிகரிப்பும் தற்போது மேற்கொள்ளப்படமாட்டாது என்றும் அமைச்சர் எமது செய்திப் பிரிவுக்கு தெரிவித்தார்.