பெங்களூரு: கர்நாடகாவில் ஆளும் பாஜக அரசு, மடங்களுக்கான நிதியை விடுவிக்கக்கூட 30% கமிஷன் கேட்கிறது என லிங்காயத் சமூகத் தலைவர் குற்றம் சாட்டினார். மடங்களின் நலன் மற்றும் மேம்பாட்டிற்காக கர்நாடக அரசு அறிவிக்கும் நிதியை, நேரடியாக பெற முடியாத சூழல் உள்ளது என லிங்காயத் சமூகத் தலைவர் திங்களேஸ்வர சுவாமி குற்றச்சாட்டு தெரிவித்தார். அடுத்தடுத்து ஊழல் புகார்கள் வருவதால், முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தலைமையிலான அரசுக்கு நெருக்கடி அதிகாரித்துள்ளது என தெரிவித்தார்.