மின்சார ஸ்கூட்டர்கள் அவ்வப்போது தீப்பிடித்து எரியும் சம்பவங்களின் எதிரொலியாக இந்தியாவில் அவற்றின் விற்பனை சற்று சரிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் ஒகினாவா, ஓலா எலக்ட்ரிக் உள்ளிட்ட நிறுவனங்களின் மின் ஸ்கூட்டர்கள் தீ பிடித்து எரிந்தன. இது போன்ற சம்பவங்களால் மின் ஸ்கூட்டர்களை வாங்க வாடிக்கையாளர்களிடையே தயக்கம் ஏற்படுள்ள நிலையில், அவற்றின் விற்பனை சுமார் 10 சதவீதம் குறைந்துள்ளதாக டீலர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே பேட்டரியில் கோளாறு உள்ளதாக ஒகினாவா நிறுவனம் 3 ஆயிரத்து 215 வாகனங்களை திரும்ப பெற்றுள்ள நிலையில், வாகனங்கள் திடீரென தீப்பிடித்து எரியும் சம்பவங்கள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும்படி பெங்களூரில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் நிறுவனத்தை மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் கேட்டுள்ளது.