தொடர்ந்து அதிரடியாக தனது தயாரிப்புகளை டெக் சந்தையில் உலாவ விட்டுவரும் ரியல்மி, தற்போது தனது புதிய டேப்லெட்டை அறிமுகம் செய்யும் முனைப்பில் இருக்கிறது. புதிய டேப்லெட் என்று சொன்னால், பெரும்பாலானோருக்கு ஏற்ற வகையில் இருக்கும் மினி டேப்லெட்டை தான் நிறுவனம் இந்தியாவிற்குக் கொண்டு வருகிறது.
ஏற்கனவே இந்தியாவில் ரியல்மி பேட் அறிமுகம் செய்யப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து ரியல்மி பேட் மினியை நிறுவனம் அறிமுகம் செய்கிறது. இந்த மினி டேப்லெட் சுமார் ரூ.12,000 என்ற தொடக்க விலையைக் கொண்டு விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏப்ரல் மாத கடைசியில் நிறுவனத்தின் நிகழ்வு இருப்பதால், அந்நாளில் இந்த மினி டேப்லெட் வெளியிடப்படலாம் எனக் கூறப்படுகிறது. எனினும், வெளியீட்டு தேதி குறித்து நிறுவனம் இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடவில்லை. தற்போது, அறிமுகத்திற்காகக் காத்திருக்கும்
ரியல்மி பேட் மினி
டேப்லெட் சிறப்பம்சங்கள் என்ன என்பதைக் காணலாம்.
மாணவர்களுக்காக HP அறிமுகப்படுத்திய குரோம்புக் லேப்டாப்ஸ்!
ரியல்மி பேட் மினி அம்சங்கள் (Realme PAD Mini Specifications)
ரியல்மி பேட் மினி டேப்லெட்டை பிலிப்பென்ஸ் நாட்டில் அறிமுகம் செய்துள்ளது. தற்போது இது இந்திய சந்தையில் வரவுள்ளது. இந்த டேப்லெட்டின் 8.7″ இன்ச் எச்டி டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டுள்ளது. இதன் ஸ்க்ரீன் டூ பாடி அளவு 84.59 ஆக இடம்பெற்றுள்ளது. இந்த டேப்லெட்
Unisoc T616
சிப்செட் கொண்டு இயக்கப்படுகிறது.
கிராபிக்ஸ் மெர்ஃபார்மன்ஸுக்காக Mali G57 GPU கிராபிக்ஸ் எஞ்சின் பயன்படுத்தப்பட்டுள்ளது. பின்பக்கம் 8MP மெகாபிக்சல் முதன்மை கேமரா நிறுவப்பட்டுள்ளது. செல்பி, வீடியோ அழைப்புகள், ஆன்லைன் கல்விக்காக 5MP மெகாபிக்சல் முன்பக்க கேமரா வழங்கப்பட்டுள்ளது. இந்த டேப்லெட் வெறும் 7.6mm தடிமனில் அல்ட்ரா ஸ்லிம்மாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
புதிய ரியல்மி டேப் மினியை சக்தியூட்ட 6400mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பெரிய பேட்டரியை ஊக்குவிக்க 18W வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு தரப்பட்டுள்ளது. இந்த டேப்லெட் 4ஜிபி ரேம், 64 ஜிபி மெமரியை ஆதரவைக் கொண்டிருக்கும் எனக் கூறப்படுகிறது. இந்த டேப்லெட்டானது இந்திய சந்தையில் ரூ.12,000 என்ற தொடக்க விலையுடன் அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்தில் நிறுவனம் ரியல்மி ஜிடி நியோ 3 ஸ்மார்ட்போன் வெளியீடு குறித்து தகவல் தெரிவித்திருந்தது. அதன்படி, நிறுவனம் Realme GT Neo 3 ஸ்மார்ட்போனை ஏப்ரல் 29 ஆம் தேதி இந்திய சந்தையில் வெளியிட உள்ளது. இந்த வெளியீட்டு நிகழ்வில் நிறுவனத்தின் வேறும் சில தயாரிப்புகள் அறிமுகம் செய்யப்படலாம் எனக் கூறப்படுகிறது. எனவே, இதே தினத்தில் ரியல்மி பேட் மினி வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், புதிய டேப்லெட்டை வெளியிட காத்திருக்கும் சியோமி நிறுவனத்திற்கு இது பெரும் போட்டியாக அமையலாம்.
போன் இன்னும் வெளியாகல; அதுக்குள்ள லீக்கான விலை விவரங்கள்!
ரியல்மி ஜிடி நியோ 3 சிறப்பம்சங்கள்
இந்த ஸ்மார்ட்போன் 6.7″ அங்குல முழுஅளவு எச்டி+ அமோலெட் திரை, 120Hz ஹெர்ட்ஸ் ரெப்ரெஷ் ரேட், 1000Hz டச் சேம்ப்ளிங் ரேட் ஆகியன இருக்கும். MediaTek டிமென்சிட்டி 8100 புராசஸர் கொண்டு, ஆண்ட்ராய்டு 12 இயங்குதள அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட ரியல்மி UI 3.0 ஸ்கின் இந்த ரியல்மி ஜிடி நியோ 3 ஸ்மார்ட்போனை இயக்குகிறது.
இதில் 12GB ரேம், 256GB ஸ்டோரேஜ் மெமரி வரை இந்த ஸ்மார்ட்போனில் வழங்கப்படும். 50MP மெகாபிக்சல் Sony IMX766 சென்சார் OIS வசதியுடன் முதன்மை கேமராவாக வருகிறது. இதனைத் தொடர்ந்து 8MP மெகாபிக்சல் அல்ட்ரா வைட், 2MP மெகாபிக்சல் மேக்ரோ லென்ஸ் என பின்பக்கம் மூன்று கேமராக்கள் கொண்ட அமைப்பு உள்ளது.
டிஸ்ப்ளே பஞ்ச் ஹோலில் 16MP மெகாபிக்சல் செல்பி கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. Realme GT Neo 3 ஸ்மார்ட்போனில் ப்ளூடூத் 5.2, வைஃபை 6E, ஜிபிஎஸ், NFC, டைப்-சி, இரட்டை 5ஜி போன்ற இணைப்பு ஆதரவும் உள்ளது.