ட்விட்டரில் டிரெண்டாகும் #ஐஸ்க்ரீம்_நல்லா_இருந்துச்சு: பீஸ்ட்டை பங்கம் பண்ண ரஜினி

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் முன்னாள் ரா அதிகாரி வீரராகவனாக விஜய் நடித்த
பீஸ்ட்
படம் ஏப்ரல் 13ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸானது.

படம் பார்த்த விஜய் ரசிகர்களே கடுப்பாகி, நெல்சனை திட்டித் தீர்த்தார்கள். ஒரு மாஸ் ஹீரோவுக்கு இப்படி ஒரு மொக்க கதையா கொடுப்பது என்று நெல்சனை கழுவிக் கழுவி ஊற்றினார்கள்.

பீஸ்ட்டை அடுத்து ரஜினியை வைத்து
தலைவர் 169
படத்தை இயக்குகிறார் நெல்சன். இந்நிலையில் பீஸ்ட் படம் பார்த்த ரஜினி ரசிகர்களோ, அய்யய்யோ அடுத்து தலைவராச்சே என்று பயந்தார்கள்.

இந்நிலையில் ரஜினிக்காக ஸ்பெஷலாக பீஸ்ட் படத்தை போட்டுக் காட்டியிருக்கிறார்கள்.

படம் பார்த்துவிட்டு வெளியே வந்த ரஜினியிடம் உறவினர் ஒருவர், பீஸ்ட் எப்படி என்று கேட்டாராம். அதற்கு ரஜினியோ, ஐஸ் க்ரீம் சூப்பராக இருந்தது என்று கூறிவிட்டுச் சென்றதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

இந்நிலையில் #ஐஸ்க்ரீம்_நல்லா_இருந்துச்சு என்கிற ஹேஷ்டேக் ட்விட்டரில் தேசிய அளவில் டிரெண்டாகி வருகிறது.

எந்த ஐஸ்க்ரீம் என்று நினைத்து அந்த ஹேஷ்டேகை க்ளிக் செய்தவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

இது தான் ரஜினியின் தக் லைஃப். தலைவர் எப்பவுமே வேற மாறி என்று ஆளாளுக்கு ட்வீட் செய்து கொண்டிருக்கிறார்கள்.

Rajini:நெல்சனை தூக்கியாச்சா, தலைவர் 169 படத்தை இயக்குவது யார்?: உண்மை இதோ
பீஸ்ட் படம் பார்த்து அதிருப்தி அடைந்த ரஜினி தன் படத்தை இயக்கும் வாய்ப்பை நெல்சனுக்கு கொடுக்க வேண்டாம் என்று கூறியதாக தகவல் வெளியானது. ஆனால் அந்த தகவலில் உண்மை இல்லையாம். தலைவர் 169 படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்குவது உறுதியாகிவிட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.