`சுட்டெரிக்கும் கோடை; என்ன சாப்பிடலாம்? எப்படிச் சாப்பிடலாம்?' – வழிகாட்டும் ஆன்லைன் நிகழ்ச்சி

கோடைக்காலம் வந்துவிட்டாலே மாம்பழம், பலாப்பழம், திராட்சை, நுங்கு, இளநீர், பதநீர், வெள்ளிரிக்காய், தர்பூசணி என பல காய்கறிகள், பழங்களின் வருகையும் களைகட்டும். எந்த உணவாக இருந்தாலும் அதை நம் உடலுக்குத் தகுந்தாற்போல் சாப்பிட்டால்தான் அதை உடல் ஏற்றுக்கொள்ளும். சில நேரங்களில் அளவுக்கு அதிகமாகச் சாப்பிட்டு பின்னர் அவஸ்தைப்படுபவர்களும் உண்டு.

summer

குழந்தைகள், பெரியவர்கள், முதியோர், பிற நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் என அவரவர் தங்களுக்குத் தகுந்தாற்போல் உணவை எடுத்துக்கொள்ள வேண்டும். கோடையில் உண்ண வேண்டிய உணவுகள் குறித்த ஆலோசனைகளை வழங்க அவள் விகடன் சார்பில் `Summer…என்ன சாப்பிடலாம்? எப்படிச் சாப்பிடலாம்?’ என்கிற ஆரோக்கிய வழிகாட்டல் நிகழ்ச்சி ஆன்லைனில் நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் பிரபல சித்த மருத்துவர் வி.விக்ரம்குமார் கலந்துகொண்டு பேசவிருக்கிறார். கோடைக்காலத்தில் நாம் பின்பற்ற வேண்டிய உணவு முறை, கோடையில் கிடைக்கும் காய்கறிகள், பழங்களை எப்படிச் சாப்பிட வேண்டும், சர்க்கரை நோயாளிகளுக்கான உணவு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்த ஆலோசனைகளை வழங்குவார். இதுதவிர, நிகழ்ச்சியில் பங்கேற்பவர்கள் கேட்கும் கேள்விகளுக்கும் பதிலளிப்பார்.

Summer Foods

ஏப்ரல் 23-ம் தேதி (சனிக்கிழமை) காலை 11 முதல் நண்பகல் 12 மணி வரை ஆன்லைனில் நிகழ்ச்சி நடைபெறும். கட்டணமில்லா இந்த வெபினாரில் பங்கேற்க முன்பதிவு அவசியம். முன்பதிவுக்கு இந்த லிங்கை க்ளிக் செய்யவும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.