சிம்லா: பிற மத நம்பிக்கைகளை அவமதித்ததாக கைது செய்யப்பட்டு தற்போது ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ள உத்தரகண்ட் மாநில சாமியார் யதி நரசிங்கானந்த் மீண்டும் ஹிந்து – முஸ்லிம் குறித்து சர்ச்சையாக பேசியுள்ளார்.
உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள தஸ்னா கோவில் தலைமை பூஜாரி யதி நரசிங்கானந்த். இவர் இந்தாண்டு ஜனவரியில் பெண்கள் மற்றும் பிற மத நம்பிக்கைகளை அவமதிக்கும் வகையில் பேசியதாக கைது செய்யப்பட்டார். பிப்ரவரி மாதம் இவருக்கு நிபந்தனை ஜாமின் கிடைத்தது.
இந்நிலையில் நரசிங்கானந்த் ஹிமாச்சல பிரதேசம் உனாவில் நடைபெற்ற மத மாநாட்டில் கலந்துகொண்டு மீண்டும் சர்ச்சையாக பேசியுள்ளார்.
நாட்டில் அதிகரித்து வரும் முஸ்லிம்களின் மக்கள்தொகை ஹிந்துக்களின் வீழ்ச்சியைக் குறிக்கிறது. ஹிந்துக்கள் தங்கள் குடும்பங்களை வலுப்படுத்த வேண்டும். தங்கள் குடும்பத்தில் மனிதநேயம் மற்றும் சனாதன தர்மம் ஆகியவற்றைப் பாதுகாக்க அதிக குழந்தைகளைப் பெற்றெடுக்க வேண்டும். முஸ்லிம் ஒருவர் பிரதமரானால் மதமாற்றம் மற்றும் வன்முறை அச்சுறுத்தலை எதிர்கொள்ள் ஹிந்துக்கள் ஆயுதம் ஏந்த வேண்டும்.” என பேசினார். இதனால் அவரது ஜாமின் ரத்தாக வாய்ப்புள்ளது.
Advertisement