புதுடெல்லி: இந்திய சந்தையில் அறிமுகமாகியுள்ளது ‘டிஸோ வாட்ச் S’ ஸ்மார்ட்வாட்ச். வரும் 26-ம் தேதி முதல் விற்பனைக்கு வரவுள்ளது இந்த வாட்ச். இதன் விலை மற்றும் சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கலாம்.
ரியல்மி டெக் லைஃப் பிராண்டான டிஸோ, கீபோர்டு போன்கள், ஸ்மார்ட்வாட்ச், ஹேர் டிரையர் மற்றும் ட்ரிம்மர் போன்ற பொருட்கள் மற்றும் ஆடியோ ஹெட் போன்களை விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில், வாட்ச் S என்ற புதிய ஸ்மார்ட்வாட்ச்சை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது அந்நிறுவனம். இதற்கு அறிமுக சலுகையும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது பார்ப்பதற்கு அப்படியே ரியல்மி நிறுவனத்தின் வாட்ச் 2 புரோ போல இருக்கிறது.
1.57 இன்ச் செவ்வக வடிவ டிஸ்பிளே கொண்டுள்ளது இந்த வாட்ச். ஹார்ட் ரேட் மற்றும் தூக்கத்தை கண்காணிக்கும் ஸ்லீப் மானிட்டர் அம்சம் இதில் உள்ளது. நடைப்பயிற்சி தொடங்கி யோகா வரையில் சுமார் 110 ஸ்போர்ட்ஸ் மோடை கொண்டுள்ளது இந்த வாட்ச். ஐபி68 வாட்டர் ப்ரூப் அம்சமும் உள்ளது. ஒரு முறை சார்ஜ் செய்தால் 10 நாட்கள் வரை பயன்படுத்தலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 150 வாட்ச் ஃபேசஸ் கொண்டுள்ளது இந்த வாட்ச்.
ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் ஐஓஎஸ் இயங்குதளம் கொண்ட போன்களில் இதனை இணைத்து பயன்படுத்தலாம். மூன்று வண்ணங்களில் கிடைக்கும் இதன் விலை 2,299 ரூபாய் என அறிவிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் அறிமுக சலுகையாக 1,999 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது. பிளிப்கார்ட் தளத்தின் மூலம் வாங்கலாம்.
Source link