சிக்கியது இன்போசிஸ்.. சீனாவுக்கு பணம் அனுப்பியதில் டிடிஎஸ் பிரச்சனை..!

இன்போசிஸ் உருவாக்கிய வருமான வரித் தளத்தில் இருந்த கோளாறுகள் படிப்படியாகக் குறைந்து இத்தளம் சரியாக இயங்க துவங்கிய நிலையில், இன்போசிஸ் மீதான வருமான வரிப் புகாரில் தற்போது தீர்ப்பு வந்துள்ளது.

வருமான வரி துறையின், வருமான வரி மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம் (ITAT) இன்போசிஸ் முன்வைத்த வாதங்களை ஏற்க முடியாது எனத் தீர்பளித்தி வரியைச் செலுத்த உத்தரவிட்டுள்ளது.

இந்திய ஐடி நிறுவனங்கள் தவிப்பு.. 6 மாதத்திற்கு அட்ரிஷன் தொடரும்.. டிசிஎஸ், இன்போசிஸ் கடும் பாதிப்பு!

 இன்போசிஸ்

இன்போசிஸ்

2011-12 மற்றும் 2012-13ஆம் நிதியாண்டில் இன்போசிஸ் இந்தியக் கிளை சில முக்கியப் பணிகளைத் தனது சீன கிளைக்குச் சப்காண்டிராக்ட் முறையில் அளித்தது. இந்தப் பணிகளுக்காக இன்போசிஸ் இந்தியா, சீனா கிளைக்குச் செலுத்திய 239 கோடி ரூபாய் பணத்திற்கு டிடிஎஸ் பிடிக்காமல் செலுத்தியது.

வருமான வரி மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம்

வருமான வரி மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம்

இது தொடர்பாக நடந்த வழக்கில் வருமான வரி மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம் (ITAT) இன்போசிஸ், இந்தியா – சீனா மத்தியிலான இரட்டை வரி விதிப்பு ஒப்பந்தம் இருக்கும் காரணத்தால் TDS பிடிக்கத் தேவையில்லை என்பதற்கான ஆய்வுகளை முன்வைத்தது. இதை வருமான வரி மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்தின் பெங்களூரு பென்ச் திட்டவட்டமாக மறுத்துவிட்டது.

இந்தியக் கிளை, சீன கிளை
 

இந்தியக் கிளை, சீன கிளை

இதனால் இன்போசிஸ் இந்திய கிளை, சீன கிளைக்குச் செலுத்திய 239 கோடி ரூபாய் பணத்திற்கு டிடிஎஸ் தொகை செலுத்த உத்தரவிடப்பட்டு உள்ளது. இதன் மூலம் இன்போசிஸ் இந்தத் தொகையைத் தற்போது செலுத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளது

வருமான வரி கமிஷனர் அறிக்கை

வருமான வரி கமிஷனர் அறிக்கை

இன்போசிஸ் இந்திய சீன கிளை மத்தியில் நடந்த பணப்பரிமாற்றம் குறித்து ஆய்வு செய்த போது வருமான வரி கமிஷனர் (சிஐடி) பிரிவு 9(1)(vii) இன் கீழ் பிரிவு 9FTS இல் வரையறுக்கப்பட்டுள்ள தொழில்நுட்ப சேவைகளுக்கான (FTS) கட்டணம் என்றும், பிரிவு 195 இன் கீழ் இத்தொகைக்கு TDS செலுத்த வேண்டும் என உத்தரவிட்டது. இதை எதிர்த்து தான் இன்போசிஸ் ITAT-வில் வழக்குத் தொடுத்தது.

ITAT விளக்கம்

ITAT விளக்கம்

மேலும் வாடிக்கையாளர் வெளிநாட்டில் இருக்கும் காரணத்தால் இது வெளிநாட்டு வர்த்தகமாக ஏற்றுக்கொள்ள முடியாது என ITAT இன்போசிஸ் நிறுவனத்திற்கு விளக்கம் கொடுத்துள்ளது. இதோடு 239 கோடி ரூபாய் பணத்திற்கு 20 சதவீத டிடிஎஸ் அல்லாமல் 10 சதவீதம் டிடிஎஸ் செலுத்தினால் போதும் எனவும் ITAT பெங்களூர் பென்ச் அறிவித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Infosys need pay 10 percent TDS on Payments of China Unit says ITAT bench

Infosys need pay 10 percent TDS on Payments of China Unit says ITAT bench சிக்கியது இன்போசிஸ்.. சீனாவுக்குப் பணம் அனுப்பியதில் வரி பிரச்சனை..!

Story first published: Tuesday, April 19, 2022, 17:18 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.