கேரள முதல்வர் பினராயி விஜயன் மீண்டும் அமெரிக்கா பயணம்

திருவனந்தபுரம்: உடல் நலக் குறைவு காரணமாக கேரள முதல்வர் பினராயி விஜயன் அமெரிக்காவில் உள்ள மேயோ கிளினிக்கில் ஏற்கனவே சிகிச்சை பெற்றார். இதற்காக கடந்த 2 வருடங்களுக்கு முன்பு அவர் அமெரிக்கா சென்று இருந்தார். பின்னர் தொடர் சிகிச்சைக்காக கடந்த ஜனவரி மாதம் மீண்டும் அமெரிக்க மருத்துவமனைக்கு சென்றிருந்தார். 2 வாரங்கள் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன் பிறகு கேரளா திரும்பினார். இந்த நிலையில் திடீரென மீண்டும் அவர் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல தீர்மானித்து உள்ளார். வரும் 23ம் தேதி அமெரிக்கா செல்ல அனுமதி கோரி மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பி உள்ளார். எத்தனை நாட்கள் சிகிச்சையில் இருப்பார் என்ற விவரம் வெளியிடப்படவில்லை. இதற்கிடையே கடந்த முறை அமெரிக்காவில் சிகிச்சை பெற்றதற்கான தொகை ₹29.82 லட்சத்தை பினராயி விஜயனுக்கு அனுமதித்து கேரள அரசு நேற்று உத்தரவிட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.