வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
கொழும்பு: இலங்கையில் எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விலையேற்றத்தால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் ஒருவர் பலியானார்; 12 பேர் காயமடைந்தனர்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் மிகவும் அவசியமான பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு உள்ளிட்ட அனைத்து பொருட்களின் விலையும் பன்மடங்கு விலை உயர்ந்துள்ளது.
இதனை எதிர்த்து கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பொதுமக்கள் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவை எதிர்த்து போராடி வருகின்றனர்.
இந்நிலையில் இலங்கையின் ரம்புக்களை எனும் இடத்தில் இன்று(ஏப்.19) மாலை போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைப்பதற்காக போலீசார் கண்ணீர்புகை குண்டுகளை வீசினர். இனையடுத்து பதற்றம் அதிகரித்து போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் மோதல் வெடித்தது. போலீசார் துப்பாக்கியால் சுட்டதில் போராட்டத்தில் ஈடுபட்ட ஒருவர் உயிரிழந்தார். 12 பேர் காயமடைந்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
Advertisement