கடைசிநாளில் பயணிகளிடம் கண்கலங்கிய விமான பணிப்பெண் – வைரலாகும் வீடியோ

இண்டிகோ நிறுவனத்தின் பணிபுரிந்த விமான பணிப்பெண் ஒருவர் கடைசிநாளில் பயணிகளிடம் நன்றி சொல்லி பிரியா விடைபெற்ற நெகிழ்ச்சி வீடியோ சமூக வலைதளங்களில் பரவிவருகிறது.
விமானப் பயணிகளிடம் பேசிய அந்த பெண், தனது பயணிகளுக்கும், நிறுவனத்திற்கும் கண்கலங்க நன்றி சொல்லியிருக்கிறார். அந்த வீடியோவை ரேடியோ ஜாக்கி அம்ருதா சுரேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். இந்த வீடியோவை 3.78 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்திருக்கின்றனர். அதில், ’’எனக்கு போகவேண்டாம் என்று தோன்றுகிறது. ஆனால் போகவேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. எனது நிறுவனம் தனது பணியாளர்களை நன்றாக கவனித்துக்கொள்கிறது. குறிப்பாக பெண்களை. அனைவருக்கும் நன்றி. எங்களுடன் பயணிக்கும் ஒவ்வொருவருக்கும் நன்றி தெரிவிக்கிறேன். உங்களால் தான் எங்களுக்கு சரியாக நேரத்தில், சில சமயங்களில் முன்கூட்டியே சம்பளம் கிடைக்கிறது’’ என்று பேசியிருக்கிறார்.
image
அவருக்கு இன்ஸ்டாகிராம் பயனர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அவரைத் தெரிந்த சிலர் அவருடைய பெயரையும் குறிப்பிட்டு அவரை புகழ்ந்து வருகின்றனர். பயனர் ஒருவர், ‘’நீங்கள் ஒரு சிறந்த பணிப்பெண் சுரபி. மேலும் நல்ல மனிதரும், மிகவும் தாழ்மையானவரும் கூட. ஆல் தி பெஸ்ட். விமானத்தில் பயணிக்கும்போது உங்களை மிஸ் பண்ணுவேன். ஆனால் உங்களுடன் நல்ல ஞாபகங்கள் எனக்கு இருக்கிறது’’ என்று கூறியுள்ளார்.

View this post on Instagram

A post shared by AMRITHA SURESSH (@amruthasuresh)

மற்றொரு பயனர், ‘’எனது பயணங்களில் உங்களை பலமுறை சந்தித்திருக்கிறேன். நேரம் தவறாமை மற்றும் வழங்கப்படும் சேவைகளால் இண்டிகோ நிறுவனத்தை எனக்கு மிகவும் பிடிக்கும். எப்போதும் சிரித்துக்கொண்டே இருங்கள்’’ என்று குறிப்பிட்டுள்ளார். மற்றொருவர், ‘’இவர் நல்ல மனிதர். ஒரு நிறுவனத்தை விட்டு விலகும்போதுகூட அதுபற்றி நல்லவிதமாக பேசுகிறார். பலர் இதுபோல் செய்யமாட்டார்கள். அவர்மீது மிகுந்த மரியாதை ஏற்பட்டுள்ளது’’ என்று குறிப்பிட்டுள்ளார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.