மகன் இறந்ததால் துக்கம்! ரொனால்டோ எடுத்துள்ள முடிவு?


தனது குழந்தையை இழந்த சோகத்தில் உள்ள பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ முக்கிய போட்டியில் கலந்து கொள்ளமாட்டார் என தெரிய வந்துள்ளது.

ரொனால்டோவிற்கும், அவரது காதலி ஜார்ஜினாவுக்கும் பிறந்த இரட்டை ஆண் குழந்தைகளில் ஒன்று இறந்துவிட்டதாக செய்தி வெளியானது.

அதனை உறுதிபடுத்தும் விதமாக ரொனால்டோவும் பதிவிட்டார். மேலும் மிகப்பெரிய வலியை தான் உணர்ந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இதனை அறிந்த அவரது ரசிகர்களும் வேதனையடைந்தனர்.

இந்நிலையில், ரொனால்டோ விளையாடி வரும் மான்செஸ்டர் யுனைடெட் கிளப் அணி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், ‘எல்லாவற்றையும் விட குடும்பம் முக்கியமானது மற்றும் இந்த கடினமான நேரத்தில் ரொனால்டோ தனது அன்புக்குரியவர்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும். அவரது குடும்பத்தின் தனியுரிமைக்கான கோரிக்கையை நாங்கள் அடிக்கோடிட்டுக் காட்டுகிறோம்’ என தெரிவித்துள்ளது.

இதன்மூலம் புல்லிபட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கும் லிவர்பூல் அணிக்கு எதிரான போட்டியில் ரொனால்டோ விளையாட மாட்டார் என தெரிய வந்துள்ளது. மான்செஸ்டர் அணி முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.