மயிலாடுதுறையில் ஆளுநர் ஆர்.என்.ரவியின் வாகன அணிவகுப்பு மீது கற்கள், கருப்புக் கொடிகள் வீசப்படவில்லை என தமிழக காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.
மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்திற்கு ஆளுநர் வருகை தந்த நிலையில், சில அரசியல் கட்சிகள் கறுப்புக்கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அடுத்து, ஆளுநரின் வாகன அணிவகுப்பு நோக்கி கருப்புக்கொடிகள் வீசப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை, தடுப்புகள் அமைத்து கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஆளுநரின் வாகன அணிவகுப்பு முற்றிலும் சென்ற பின் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் காவலர்களுடன் வாக்குவாதம் செய்ததாகவும், அதற்கு பின்னரே கருப்புக்கொடிகளை அவர்கள் வீசி எறிந்ததாகவும் போலீசார் குறிப்பிட்டுள்ளனர்.