100 போட்டிகள் ஒற்றை சதம் கூட இல்லை: சோகத்தில் மூழ்கும் விராட் கோலி ரசிகர்கள்!



இந்திய அணியின் Run Machine என்று அழைக்கப்படும் விராட் கோலி 100 போட்டிகளை கடந்தும் இதுவரை ஒற்றை சதம் கூட அடிக்காததால் ரசிகர்கள் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

இந்திய அணிக்காகவும், ஐபிஎல்-லில் ஆர்சிபி அணியாகவும் ஓட்டங்களை மழையாக குவித்து வந்த இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி 100 போட்டிகளை கடந்தும் எந்தவொரு போட்டியிலும் சதம் அடிக்காததால் ரசிகர்கள் மிகுந்த சோகத்தில் முழ்கியுள்ளனர்.

கடந்த 2019ம் ஆண்டு நவம்பர் 22ம் திகதி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் வைத்து நடைபெற்ற பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் இறுதியாக சதமடித்த விராட் கோலி அதனை அடுத்து விளையாடிய எந்தவொரு போட்டியிலும் விராட் கோலி தனது வழக்கமான மற்றும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை.

இந்த நிலையில் இன்று ஐபிஎல்-லில் லக்னோ அணிக்கு எதிராக விளையாடிய கோலி டக் அவுட் ஆகி வெளியேறியதை தொடர்ந்து, விராட் கோலி சதமடிக்காமல் மைதானத்தை விட்டு வெளியேறும் 100 போட்டி என்று அவரது ரசிகர்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.

ஒருமுனையில் விராட் கோலியின் மோசமான ஃபார்ம்மிற்கு ரசிகர்கள் வருத்தம் தெரிவித்து வந்தாலும் மறுப்பக்கம் விராட் கோலிக்கு ஆதரவான மற்றும் உறுதுணையாக கருத்துக்களையும் அவரது ரசிகர்கள் இணையத்தில் தெரிவித்து வருகின்றனர்.

விராட் கோலியின் இந்த மோசமான ஃபார்ம் தொடர்பாக இலங்கை அணியுடனான தொடரின் போது பதிலளித்த இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, கோலிக்கு சிறிது தனிமை தேவைப்படுவதாக தெரிவித்து இருந்தார்.

தூணாய் நின்ற டூ பிளெஸ்ஸிஸ்: அபார வெற்றி பெற்ற ராயல் சேலஞ்சர்ஸ்! 

கோலி இதுவரை டெஸ்ட் போட்டிகளில் 27 சதம், ஒருநாள் போட்டியில் 43 சதம் மற்றும் டி-20 போட்டியில் 5 சதம் என 75 சதம்களை விளாசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.